2018 ஆம் ஆண்டிற்க்கான மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி தொடர், மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம், அயர்லாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா, ஆகிய 10 அணிகள் பங்கேற்க்கின்றன.
மகளிர் டி20 உலகக்கோப்பையானது முதன் முதலாக இங்கிலாந்தில் நடைபெற்றது, இவற்றில் இங்கிலாந்து அணி கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை 5 உலகக்கோப்பை தொடர்கள் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்றது. இவற்றில் 3 முறை ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி தலா ஒருமுறையும் உலக கோப்பையை வென்றுள்ளது. இந்திய அணி 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி அதன் பின்பு நடைபெற்ற 3 உலகக்கோப்பை தொடர்களில் முதல் சுற்றிலேயே வெளியேறியது.
5 முறை உலகக்கோப்பையை நழுவவிட்ட இந்திய அணி இந்தாண்டு நடைபெறும் தொடரில் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 'குரூப் B' பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆயர்லாந்து போன்ற அணிகளுடன் களம்காணவுள்ளது. புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் பங்கேற்க்கவுள்ளது.
ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா அணி மிகுந்த உத்வேகத்துடன் காண படுகிறது எனவே இந்தியா அணி வெற்றி கனியை எட்டி பறிக்கும் எனக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.இவற்றில் இந்திய அணியில் கவனிக்ககூடிய 4 இந்திய வீராங்கனைகளை பற்றிப் பார்க்கலாம்.
#4 மித்தாலி ராஜ்
இதுவரை நடைபெற்ற அனைத்து உலகக்கோப்பை தொடர்களிலும் இந்திய அணிக்காக பங்கேற்று வரும் மித்தாலி ராஜின் அனுபவம் இம்முறை இந்திய அணிக்குப் பெரிய பலமாகவே இருக்கும்.
35 வயதான மித்தாலியின் மீது மிக எதிர்பார்ப்பு இருந்தாலும், சமீபத்தில் நடந்து வறும் போட்டிகளில் சொதப்பி வருகிறார். இலங்கைக்கு எதிரான தொடரில் 4 போட்டிகளில் 53 ரங்களை மட்டுமே குவித்தார். எனினும் ஆஸ். 'ஏ' அணிக்கு எதிராக 60 பந்துகளில் சதமடித்து தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார்.
கடினமான சூழ்நிலைகளிலும் இவரது பொறுமையான ஆட்டம் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
#3 பூனம் யாதவ்
பூனம் யாதவ், இந்திய அணியின் முன்னனி சுழற்ப்பந்துவீச்சாளராக அணியில் இடம்பெற்றுள்ளார். மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளம் சுழற்ப்பந்துவீச்சீற்க்கு சாதகமாக இருப்பதால் பூனம் யாதவ் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பாரென நிச்சயமாக எதிர்பாக்கலாம்.
2018 ஆம் ஆண்டில் டி20 போடிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியுள்ள பூனம் யாதவ், 20 போட்டிகளில் பங்கேற்று 27 விக்கெட்டுகளை கைபற்றியுள்ளார். சராசரி 14.66 ஆகும்.
ஆடுகளம் சுழற்ப்பந்துவீச்சீற்க்கு சாதகமாயின், பூனம் யாதவ் பந்துவீச்சை சமாளிப்பது எதிரணிக்கு மிகவும் கடினமே. இவரது பந்துவீச்சில் புதிய யுக்திகள் மற்றும் வேகத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 27 வயதான பூனம் யாதவ் 47 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் இந்திய அணி கோப்பை வெல்ல கைகொடுக்கலாம்.
#2 ஸ்ம்ரித்தி மந்தானா
இந்திய அணியின் துவக்க வீராங்கனையாக களம் இறங்கும் மந்தானா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார் ஏன்பதில் சந்தேகம் இல்லை. சமீபத்தில் அஸ்திரேலிய, தென் ஆப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக சிறப்பாக செய்யல் பட்டாலும் கடைசி சில போட்டிகாளில் சொதப்பினார், இருப்பினும் அணியில் முக்கிய வீராங்கனை ஆவர்.
ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான இந்தியா அணி மிகுந்த உத்வேகத்துடன் காண படுகிறது எனவே இந்தியா அணி வெற்றி கனியை எட்டி பறிக்கும் எனக் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். zஇந்திய அணியின் துணைகேப்டனான மந்தானா பிபில் (BBL) மற்றும் கேஏஸ்ல் (KSL) போன்ற தொடர்களில் விளையாடிய அனுபவம் உள்ளது. சமீபத்தில் KSL தொடரில் 9 போட்டிகளில் ஒரு சதம் உட்பட 421 ரன்களை குவித்த மந்தானா உலகக்கோப்பையிலும் சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்துவாரென எதிர்பார்க்கலாம்.
இதுவரை 47 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமுள்ள மந்தானா 868 ரன்களை குவித்துள்ளார். முன் வரிசையில் களமிறங்கும் மந்தானா தனது ரன் வேகத்தின் மூலம் எந்தவொரு அணிக்கும் தொல்லை தரலாம்.
#1 ஹர்மான்பிரீத் கவுர்
இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்மான்பிரீத் கவுரை 'டி20 ஸ்பெஷலிஸ்ட்' என அழைக்கலாம். மந்தானாவை போன்று ஹர்மான் பிரீத் கவுரும் BBL மற்றும் KSL போன்ற தொடர்களில் விளையாடிய அனுபவம் உண்டு.
இதுவரை 77 போட்டிகளில் விளையாடிய இவர் 1703 ரன்களை குவித்துள்ளார். சீரான வேகத்தில் ரன் சேர்க்கும் கவுர் மிடில் ஆர்டெரில் பொறுமையாக விளையாடுவதிலும் திறமை மிக்கவர்.
தனது பேட்டிங் மட்டுமின்றி பந்துவீச்சிலும் தேவை படும்பொழுது செயல்படுகிறார். 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள கவுர் வெற்றிக்குப் பெரிதும் உதவுவார் ஏன்பதில் சந்தேகமில்லை.
கவுரின் கேப்டன் யுக்திகள் குறித்து பல கேள்விகள் எழுந்தாலும் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தி வரும் இவர் தொடரை வென்று கேள்விகளுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கலாம்.