உலகில் டெஸ்ட் போட்டிகளில் 99.14 என்பதே அதிகபட்ச பேட்டிங் சராசரி ஆகும். இந்த பேட்டிங் சராசரியை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட் மேன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் போது வைத்திருந்தார். இவர் ஓய்வு பெற்று 70 வருடங்கள் ஆகிறது , இதுவரை ஒருவர் கூட இந்த பேட்டிங் சராசரிக்கு அருகில் கூட வரவில்லை. தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 என்பதே அருமையான பேட்டிங் சராசரியாக பார்க்கப்படுகிறது. தற்போதைய யுகத்தில் சச்சின் டெண்டுல்கர் , குமார் சங்கக்காரா , ராகுல் டிராவிட், ஏ.பி. டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெரும் போது 50 பேட்டிங் சராசரியைதான் வைத்திருந்தனர்.
ஒரு டெஸ்ட் பேட்ஸ்மேன்-இன் பேட்டிங் சராசரி அவர்களுடைய சீரான பேட்டிங் திறன் மூலமாகவே நிர்ணயிக்கப்படுகிறது . நாம் இங்கு தற்போதைய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் அதிக பேட்டிங் சராசரியை ( குறைந்தபட்சம் 20 இன்னிங்ஸில் ) வைத்துள்ள சிறந்த 5 பேட்ஸ்மேன்கள்-களை பற்றி காண்போம் . அத்துடன் தற்போதைய டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் யார் தனது சீரான ஆட்டத்தை சிறப்பாக வெளிபடுத்தியுள்ளனர் என்பதை பற்றியும் காண்போம்.
#5. சேதேஷ்வர் புஜாரா
டெஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் 2010 ஆம் ஆண்டு அறிமுகமானார். பின்னர் அந்நிய மண்ணில் இவரது பேட்டிங் எடுபடவில்லை எனவே சிறிது மாதங்களுக்கு பிறகு அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.
சமீப காலமாக புஜாரா ஒரு நல்ல ஆட்டத்திறனுடன் செயல்பட்டு வருகிறார் . டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை குவித்து வருகிறார். புஜாராவின் அற்புதமான சதத்தினால் அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது
புஜாரா இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 16 சதங்கள் மற்றும் 22 அரை சதங்களுடன் 5127 ரன்களை குவித்து 49.77 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்.
#4.ஜோ ரூட்
ஜோ ரூட் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கும்போது அனைவராலும் மனம் கவர்ந்த இங்கிலாந்து பேட்ஸ்மேனாக பார்க்கப்பட்டார் . பின்னர் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் இடையிடையே சிறிது தடுமாற்றம் ஏற்பட்டது . தனது ஆட்டத்திறனை சீராக வெளிபடுத்த முடியாமல் சற்று தடுமாறி வந்தார் .
பின்னர் கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி தனது தவறை குறைத்துக் கொண்டு சர்வதேச போட்டிகளில் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிபடுத்த ஆரம்பித்தார். ஜோ ரூட் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி 41 அரை சதங்களை குறைந்த இன்னிங்ஸில் அடித்து சாதனை படைத்துள்ளார். ஆனால் இவர் டெஸ்டில் 15 சதங்களை மட்டுமே விளாசியுள்ளார். இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து ஆகிய இரண்டையும் சரியாக எதிர்கொள்ளும் திறமை பெற்றுள்ளார். ரூட் இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 41 அரை சதங்கள் மற்றும் 15 சதங்களுடன் 6508 ரன்களை குவித்து 50.44 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்.