#3.கேன் வில்லியம்சன்
கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக உருவெடுத்தவர் நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன். இவர் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து என இரண்டையும் சரியாக விளையாடும் திறமை பெற்றுள்ளார். அத்துடன் பேட்டிங் நுட்பத்தினையும் சரியாக கையாளும் திறமையை கொண்டு விளங்குகிறார். இவர் நியூசிலாந்து கிரிக்கெட் அணியை சரியாக வழிநடத்தி கிரிக்கெட்டில் ஒரு புது சகாப்தத்தை படைத்து வருகிறார்.
நியூசிலாந்து அணி , சமீபத்தில் ஐக்கிய அரபு நாட்டில் நடந்த பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதே இதற்கு தகுந்த சாட்சியாக உள்ளது . இவர் இதுவரை 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 அரை சதங்கள் மற்றும் 19 சதங்களுடன் 5815 ரன்களை குவித்து 51.91 என்ற சராசரியை வைத்துள்ளார்.
#2.விராட் கோலி
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக தற்போதைய தலைமுறையில் சிறந்து விளங்கக்கூடியவர் விராட் கோலி. கோலியின் தீவிர பேட்டிங் திறன் மற்றும் செறிவே அவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக மாற வைத்தது. இவர் இதுவரை கிட்டத்தட்ட அனைத்து பௌலர்களின் பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடியுள்ளார்.
விராட் கோலிக்கு ஸ்கோர்களை மாற்றியமைக்கும் திறன் அதிகம் உள்ளது. கோலி 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 அரைசதம் மற்றும் 25 சதங்களுடன் 6508 ரன்களை குவித்து 54.23 என்ற பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்
#1. ஸ்டிவன் ஸ்மித்
ஸ்டிவன் ஸ்மித் இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அத்துடன் கிரிக்கெட்டை விட்டு தற்போது சற்று தொலைவிலும் உள்ளார். தற்போதைய பேட்ஸ்மேன்களில் டெஸ்ட் போட்டிகளில் 61.37 என்ற மிகப்பெரிய பேட்டிங் சராசரியுடன் முதலிடத்தில் உள்ளார். ஸ்டிவன் ஸ்மித் ஆட்டத்தை மாற்றியமைக்கும் திறனை பெற்றுள்ளார் . இவர் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து என இரண்டிலும் சம அளவில் சரியாக விளையாடக்கூடியவர்.
ஸ்மித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை லெக்- ஸ்பின்னராக தொடங்கினார். நாளடைவில் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டார். இவர் 64 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 24 அரைசதம் மற்றும் 23 சதங்களுடன் 6199 ரன்களை குவித்துள்ளார்.