இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவி வெளியேறியது. 240 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி ஆரம்பத்திலேயே 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி நியூசிலாந்தின் அற்புதமான பந்துவீச்சால் வீழ்த்தப்பட்டனர். லோகேஷ் ராகுல் ஒரு சாதாரண பந்துவீச்சிலே தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இந்திய அணி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது விக்கெட்டை இழப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் லோகேஷ் ராகுல்.
கே.எல்.ராகுல் ஸ்விங் பந்துவீச்சில் ஒரு வலிமையான அணிகளுக்கு எதிராக மிகவும் மோசமான பேட்டிங்கை வெளிபடுத்தி வருகிறார். குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இவரது ரன்கள் முறையே 26, 0, 1 ஆகும். அத்துடன் நியூசிலாந்துடனான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்திலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.
இவரை ஒரு அதிரடி பேட்ஸ்மேனாக இந்திய அணி நிர்வாகம் கருதுகிறது. கே.எல்.ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் 75ஆக இருப்பது அணி நிர்வாகத்திற்கு கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2018 ஐபிஎல் தொடரிலும் கே.எல்.ராகுல் எதிர்கொண்ட முதல் 20-25 பந்துகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் சுமாராகவே உள்ளது.
லோகேஷ் ராகுல் சற்று வலிமையான அணிகளுக்கு எதிராக ரன் குவிக்க கடுமையாக தடுமாறி வருவதால் இந்திய அணி நிர்வாகம் சில மாற்று வீரர்களை பரிசிலினை செய்ய உள்ளது. அவ்வாறு பரிசிலிக்க வாய்ப்புள்ள 5 தொடக்க ஆட்டக்காரர்களைப் பற்றி காண்போம்.
#5 ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட் யாரும் அறிந்திராத வீரராகவும், உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் மறைமுகமாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ரன்குவிப்பில் ஈடுபட்டும் வருகிறார். இவரது வயது 22 மட்டுமே என்பதால் முழுவதும் மேம்பட்ட வீரர் என்று கூறிவிட முடியாது. இருப்பினும் இவரது நுணுக்கமான பேட்டிங் இந்திய-ஏ அணிக்காக அளித்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. மே மாத இறுதியில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய-ஏ அணியில் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக 4 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 129.83 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 470 ரன்களை விளாசினார்.
வலதுகை பேட்ஸ்மேனான இவர் 36 இன்னிங்ஸிலேயே 1936 ரன்களை குவித்துள்ளது. அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. இவரது ஸ்ட்ரைக் ரேட் 100.93 மற்றும் 56.97 என்ற பேட்டிங் சராசரியையும் வைத்துள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். அத்துடன் உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிரா அணிக்காக அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இவர் 8 இன்னிங்ஸில் 90.12 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 45.62 சராசரியுடன் 365 ரன்களை குவித்துள்ளார்.
வருங்காலத்தில் இந்திய அணியின் முக்கிய வீரராக ருதுராஜ் கெய்க்வாட் தன்னை அர்ப்பணித்துக் கொள்வார் என்பதில் சந்தேகமில்லை. 2020 ஐபிஎல் தொடரில் அம்பாத்தி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற விட்ட காரணத்தினால் ருதுராஜ் கெய்க்வாட்-ற்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.