#4 பிரித்வி ஷா
பிரித்வி ஷா ஏற்கனவே தனது சிறப்பான ஆட்டத்தை ஐபிஎல் தொடரிலும், இந்திய அணிக்காகவும் வெளிபடுத்தி உள்ளார். இவர் ஏற்கனவே இந்திய தேசிய அணயில் அறிமுகமாகி சதம் விளாசி தனது பெயரை பதித்துள்ளார். இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை களம் காணவில்லை.
இவரது குறைவான லிஸ்ட்-ஏ கிரிக்கெட் வாழ்வில் 26 இன்னிங்ஸில் 40 சராசரி மற்றும் 114 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1065 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் விரேந்தர் சேவாக்கின் ஆகியோரின் கவலையாக திகழ்கிறார் பிரித்வி ஷா. இருப்பினும் இவரது பேட்டிங் நுணுக்கங்கள் முழுவதும் மேம்பட்டதாக தென்படவில்லை. இது மட்டுமே இவரது கிரிக்கெட் வாழ்விற்கு இடையூராக இருப்பதுபோல் தென்படுகிறது.
இந்தியாவின் வருங்கால தூணாக பிரித்வி ஷா கருதப்படுகிறார். எனவே இந்திய தேர்வுக்குழு இவரை இந்திய-ஏ அணியில் அதிக வாய்ப்பளித்தோ அல்லது ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவானுடனோ தொடக்க வீரராக களமிறக்க இந்திய அணி நிர்வாகம் முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 மயான்க் அகர்வால்
2019 உலகக்கோப்பை இந்திய அணியில் விஜய் சங்கருக்கு மாற்று வீரராக மயான்க் அகர்வால் அணியில் இடம்பிடித்தார். வீரர்களுக்கு காயம் ஏற்பட்டிருந்தாலும் இந்திய அணி ஒரு நிரந்தர வலிமை வாய்ந்த அணியாக இருந்த காரணத்தால் மயான்க் அகர்வாலுக்கு ஆடும் XIல் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் சர்வதேச போட்டிகளிலிருந்து அழைப்பு வர கிட்டத்தட்ட 12-18 மாதங்கள் கடுமையாக உழைத்தார். இறுதியாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிரித்வி ஷா-விற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு மாற்று வீரராக மயான்க் அகர்வால் களமிறக்கப்பட்டார்.
வாய்ப்பு கிடைத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் அருமையாக விளையாடி காண்போரை அதிகம் கவர்ந்தார். இவர் லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் 75 போட்டிகளில் பங்கேற்று 100 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 49 சராசரியுடன் 3605 ரன்களை குவித்தார். 28 வயதான இவர் இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகவில்லை. இருப்பினும் அணி நிர்வாகம் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மாவிற்கு மாற்று வீரராக இவரை களமிறக்க முயற்சிக்கும்.