#2 சுப்மன் கில்
பிரித்வி ஷா இடம்பெற்றிருந்த அதே U-19 அணியில் சுப்மன் கில்லும் இடம்பிடித்திருந்தார். பிரித்வி ஷா சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இரு மாதங்கள் கழித்து சுப்மன் கில் இடம்பிடித்தார். நியூசிலாந்திற்கு எதிராக இரு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினார். இருப்பினும் இவரது இயல்பான ஆட்டத்திறனை கருத்தில் கொண்டு விராட் கோலி இந்திய அணியில் சுப்மன் கில்லை இனைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில் ஒரு நுணுக்கமான பேட்ஸ்மேன் மற்றும் ஸ்விங் பௌலிங்கை சரியாக எதிர்கொள்ளும் திறன் படைத்துள்ளார். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் பேட்ஸ்மேனான இவர் ஒரு அதிரடி தொடக்க ஆட்டக்காரர். அத்துடன் தன்னுடன் களமிறங்கும் மற்றொரு தொடக்க வீரரை அதிரடியாக ஆடவிட்டு தன்னை பொறுமையாக விளையாடும் வகையில் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவர். இந்த நுணுக்கத்தை தற்கால இளம் பேட்ஸ்மேன்களிடம் காண்பது மிகவும் அரிது.
இவர் 44 இன்னிங்ஸில் 46.05 சராசரி மற்றும் 85.6 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1796 ரன்களை குவித்துள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான விருதினை சுப்மன் கில் வென்றதன் மூலம் தன்னுடைய ஆட்டத்திறனை நிருபித்துள்ளார். இதே நோக்கத்துடன் சுப்மன் கில் செயல்பட்டு வந்தால் கண்டிப்பாக இந்திய அணியில் இவர் இடம்பெறுவதை யாரலும் தடுத்திட இயலாது. இவர் மிடில் ஆர்டரிலும் களமிறங்கும் திறன் கொண்டவர் என்பது சுப்மன் கில்லின் கூடுதல் வலிமையை எடுத்துரைக்கிறது.