#1 அஜீன்க்யா ரகானே
அஜீன்க்யா ரகானே இந்திய மாற்று தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் ஒருநாள் கிரிக்கெட்டிற்கு திரும்ப வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. இவரது மோசமான ஆட்டத்தால் இந்திய அணியிலிருந்து இவர் கழட்டி விடப்படுவதற்கு முன்பு வரை இந்திய மாற்று தொடக்க ஆட்டக்காரராகவும், 2-3 வருடங்களாக இந்திய அணியின் நம்பர்-4 பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தார். தொடக்க வீரராக இவர் களமிறங்கிய கடைசி 11 இன்னிங்ஸில் 7 அரைசதங்கள் மற்றும் 1 சதத்தினை விளாசியுள்ளார். பின்னர் நம்பர் 4ல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து நீக்கப்பட்டார்.
இவர் இந்திய அணிக்காக 150 போட்டிகளில் பங்கேற்று அதிக அனுபவம் வாய்ந்த வீரராக உள்ளார். இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் 87 இன்னிங்ஸில் 35.26 சராசரி மற்றும் 79 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2962 ரன்களை குவித்துள்ளார். ரகானேவின் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டினால் அதிகம் நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டார். இருப்பினும் 2019 ஐபிஎல் தொடரில் அந்த எண்ணத்தை மாற்றி 139 என்ற அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
இந்திய அணிக்கு தற்போது நம்பர் 4 பேட்ஸ்மேன் மற்றும் மாற்று தொடக்க ஆட்டக்காரர் தேவை உள்ளது. ரகானே இந்த இரு பேட்டிங் வரிசையிலும் அற்புதமாக விளையாடும் திறன் கொண்டவர். எனவே இதன்மூலம் இந்திய அணிக்கு கூடுதல் வீரரை அணியில் சேர்க்க வாய்ப்பு கிடைக்கும்.