ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் தங்களது திறமையை வெளிப்படுத்தும் அருமையான கலமாக இருக்கிறது. இந்த தொடரில் பலர் பல சாதனைகளை படைத்துள்ளார்கள். அதுமட்டுமின்றி இந்த தொடரில் சிறப்பாக விளையாடி பலர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்துவது ஒரு மெகா சாதனையாக திகழ்கிறது. அதேபோல், பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய சாதனையாக இருப்பது சதங்களை குவிப்பதாகும். அணியின் இக்கட்டான சூழ்நிலையில் தனது பேட்டிங்கில் ரன்களை குவித்து அணியை வெற்றி பெற வைப்பதுமாகும். அதேப்போல் கடந்த உலகக்கோப்பையில் தங்களது திறமையை பயன்படுத்தி பல சதங்களை குவித்தவர்கள் பற்றி காண்போம்.
# 1 சச்சின் டெண்டுல்கர் - 6 சதங்கள் (இந்தியா)
கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்களை அடித்த மதிப்புமிக்க சாதனையைப் படைத்துள்ளார். உலகக் கோப்பைகளில் டெண்டுல்கர் விளையாடிய 45 போட்டிகளில் 6 சதங்களை குவித்துள்ளார். இதில் தனது முதல் சதத்தை 1996 ஆம் ஆண்டில் பார்பதி மைதானத்தில் கென்யாவுக்கு எதிராக 127 என்ற அற்புதமான இன்னிங்ஸுடன் ரசிகர்களை மகிழ்வித்தார்.
சச்சின் டெண்டுல்கர் தனது இரண்டாவது சதத்தை மீண்டும் கென்யாவுக்கு எதிராகவே குவித்தார். 1999 ஆம் அண்டில் பிரஸ்டல் நகரில் உள்ள மைதானத்தில் 140 ரன்கள் குவித்துள்ளார். சச்சின் தனது மூன்றாவது சதத்தை நமீபியா அணிமனயுடன் விளையாடி பெற்றார்.
இதன் பின் 2011 ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் உலகக் கோப்பையை வென்றார், ஆனால் டெண்டுல்கர் சதம் அடித்த ஒரு போட்டியில் கூட இந்தியா வெற்றி பெற முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டி சமநிலையில் முடிந்தது. இந்திய அணியின் ஹிட் மேன் ரோகித் சர்மா இன்னும் ஒரு சதத்தின் மூலமாக சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க காத்துள்ளார்.
# 2 குமார் சங்கக்காரா - 5 சதங்கள் (இலங்கை)
உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4 சதங்களை அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் இவலங்கை அணியை சார்ந்த குமார் சங்கக்காரர் ஆவார். இவர் தனது உலகக் கோப்பை வாழ்க்கையை 5 புகழ்பெற்ற உலகக் கோப்பை சதங்களுடன் நிறைவு செய்தார். இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான சங்கக்காரா தனது முதல் இரண்டு உலகக்கோப்பையில் ஒரு சதம் கூட குவிக்கவில்லை. ஆனால் இவர் 2011 ஆம் ஆண்டில் நியூசீலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 111 ரன்களை குவித்துள்ளார். இதன் பின் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தனது இரண்டாவது சதத்தையும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்றாவது சதத்தையும் நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சங்கக்காரா சதம் குவிதத்திருந்தாலும் இலங்கை அணி தோல்வியை தழுவியது. ஸ்காட்லாந்திற்கு எதிராக தனது ஐந்தாவது சதத்தை குவித்து சாதனை படைத்துள்ளார் சங்கக்காரா.
# 3 ரோகித் சர்மா - 5 சதங்கள் (இந்தியா)
இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா நடப்பு உலகக் கோப்பையில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் தனது உலகக்கோப்பையில் மொத்தம் 5 சதங்களை விளாசியுள்ளார். 2015 ஆம் ஆண்டு ரோகித் சர்மா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தை குவித்தார். இதன் பிறகு நடப்பு உலகக் கோப்பையில் சர்மா முதல் சதத்தை தென்னாப்பிரிக்காவுன் குவித்தார். இதில் சர்மா ஆட்டத்தின் தொடக்க முதல் இறுதி வரை விக்கெட் இழக்காமல் 122 ரன்களை குவித்திருந்தார். தனது இரண்டாவது சதத்தை பாகிஸ்தான் அணியுடனும் குவித்துள்ளார். இப்போட்டியில் 140 ரன்களை குவித்திருந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம் (102) அடித்தும் 31 வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை அடைந்தனர். இதனால் ரோகித் சர்மாவின் சதம் வீணாகி போனது. நேற்றைய 40 வது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் சர்மா தனது ஐந்தாவது சதத்தை குவித்தார். இவர் இந்த போட்டியில் 104 ரன்கள் குவித்து சவுமியா சர்காரின் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். இதில் ரோகித் சர்மா 5 சிக்ஸ்ர்களையும் 7 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். நடப்பு உலகக் கோப்பையில் ரோகித் சர்மா 570திற்கு மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். எனவே அடுத்துள்ள இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோகித் மீண்டும் ஒரு சதத்தை குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.