ஓருநாள் (ODI) மற்றும் டி20 (T20) போன்ற போட்டிகள் ரசிகர்களிடையே மிகுந்தவர வேற்பைப் பெற்றாலும், இன்றளவிலும்கூட டெஸ்ட்போட்டியனது மிகவும் 'மதிப்புமிக்க' போட்டியாகவே பார்க்கப்படுகிறது.
இவ்வகையான போட்டியை, இந்தியா அணிமுதன் முதலாக 1932 ஆம் ஆண்டு சர்வதேச அளவில்இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் பங்கேற்றது. அப்போதைய இந்திய அணியின் சிறந்தபேட்ஸ்மென் என அழைக்கப்படும் சி கே நாய்டு இந்திய அணியைக் கேப்டனாக வழிநடத்தினார், எனினும் இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
அதன்பிறகு, 86 ஆண்டுகளில் இந்திய அணியை 33 கேப்டன்கள் வழி நடத்தியுள்ளார்கள். இந்த 33 கேப்டன்களில் நவாப் பட்டோடி, கவாஸ்கர், முகமது அசாருதீன், கங்குலி, தோணி, மற்றும் தற்போதைய கேப்டன் கோஹ்லி போன்றோர் குறிப்பிட்ட காலம் அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைத்தாலும் பங்கஜ்ராய், ரவிசாஸ்திரி, குண்டப்பா விஸ்வநாதன் போன்றகளுக்கு ஒரு சில போட்டிகளை வழிநடத்தவே வாய்ப்பு கிடைத்தன.
இவற்றில், இந்திய டெஸ்ட் வரலாற்றில் 5 சிறந்த கேப்டன்களை பற்றிப் பார்க்கலாம்.
#5 ராகுல்டிராவிட் (2004-2007)
போட்டிகள்: 25; வெற்றி: 8; தோல்வி: 6; டிரா: 11
2005ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதிவியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டார். 'கிரேக் சேப்பல் எறா' என்றழைக்கப்படும் காலங்களில் கங்குலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் சேவாக், ஹர்பஜன் மற்றும் ஜாகீர் போன்றவீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். பின்பு, டிராவிட் 2005 ஆம் ஆண்டு முழுநேர கேப்டனாக நியாமிக்கப்பட்டார்.
அணியிணுள் பல குழப்பங்கள் இருந்தாலும் டிராவிட் தனது இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்தி 1-0 என்றகணக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி மேற்கிந்திய தீவுகளில் 36 ஆண்டுகளுக்குப் பிறகு லாரா, சந்தர்பால் போன்றவீரர்களின் அணியையும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் கவாஸ்கர், பாட்டோடி போன்றோரைப் பின்னுக்கு தள்ளிச் சிறந்த 5 கேப்டன்களின் வரிசையில் இடம் பெற்றிருக்கின்றார்.
#4 முகமது அசாருதீன் (1989-1998)
போட்டிகள்: 47; வெற்றி: 14; தோல்வி: 14; டிரா: 19
தோனி மற்றும் கங்குலிக்கு முன்பு 90களில் அசாருதீன் அதிக போட்டிகளை வழிநடத்தியுள்ளார், இவரது தலைமையில் இந்திய அணி பல வெற்றி, தோல்விகளை சந்தித்திருந்தாலும் இந்தியமண்ணில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் 8 தொடர்களில் 6ல் வெற்றிபெற்றும் மற்றவைகளை டிராசெய்துள்ளார், இவரது தலைமையில் சச்சின், கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற வீரர்கள் மற்றும் கங்குலி, டிராவிட் போன்ற இளம் வீரர்களும் வெற்றிக்கு உதவினர். இருப்பினும், ஆசியாவிற்க்கு வெளியில் ஒரு தொடரில் கூட வெற்றிபெற இயலவில்லை. இவரின் தலைமை காலத்தில் ஒரு போட்டியில் மட்டுமே ஆசியாவிற்க்கு வெளியே வெற்றி பெற்றுள்ளது. ஆசியாவிற்க்கு வெளியே அசாருதீனின் ஆட்டமும் மந்தமாகவே இருத்தன.
#3 விராட்கோஹ்லி (2014- present)
போட்டிகள்: 42; வெற்றி: 24; தோல்வி: 9; டிரா: 9
2014 ஆம் ஆண்டு ஆஸி. தொடரில் தோணி திடீரெனக் கேப்டன் பதவியிலிருந்து விலகினார், அதன்பின்பு இந்தியா அணியைக் கோஹ்லி வழிநடத்தி வருகின்றார்.
கோஹ்லியின் தலைமையில் இந்திய அணி இந்தியதுணை கண்டத்தில் மட்டுமே அதிக போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்திய அணியானது தரவரிசையில் நெம்பர் 1 இடத்தைஅடைந்தது.
இவரின் முதல் 9 தொடர்களிலேயே இந்திய கிரிகெட் வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்ததோடு தற்பொழுதே கங்குலியின் வெற்றிகளைச் சமன் செய்துள்ளார். இருப்பினும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற தொடர்களில் தோல்வி அடைந்ததன் மூலம் இவரின் தலைமைபற்றிக் கேள்விகள் எழுந்தன.
அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற தொடர்களில் வென்று தனது விமர்சங்களுக்கு பதில் அளிப்பார எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
#2 எம் எஸ் தோனி (2008-2014)
போட்டிகள்: 60; வெற்றி: 27; தோல்வி: 18; டிரா: 15
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தோனி சிறந்த கேப்டன்களில் ஒருவராவார். இவரது தலைமையில் இந்திய அணி முதன் முதலில் டெஸ்ட் தர வரிசையில் நம்பர் 1 இடத்தை அடைந்தன. இவர் இந்திய அணியை அதிக போட்டி மற்றும் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.
இந்திய மண்ணில் வெற்றிகரமாக இருந்தாலும் மற்ற கேப்டன்களை போல இவரது தலைமையிலும் வெளிநாடுகளில் மோசமாகவே செயல்பட்டுள்ளது.
இவரது தலைமையில், நியூசிலாந்து மற்றும் மேற்க்கிந்திய தீவுகளில் வெற்றி பெற்றும் தென் ஆப்பிரிக்காவில் டிராசெய்தும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமக செயல்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு வரை அனைத்து நாடுகளிலும் மிதமாக செயல்பட்டாலும் 2012ஆம் ஆண்டிற்க்கு பின்பு இந்திய அணிமோசமான ஆட்டத்தை வெளிபடுத்திவந்தன, இருப்பினும் இந்திய அணியின் வரலாற்று சிறப்பு மிக்க கேப்டன்களில் ஓருவராவர்.
#1 சௌவ்ரவ் கங்குலி (2000-2004)
போட்டிகள்: 49; வெற்றி: 21; தோல்வி: 13; டிரா: 15
கங்குலி, தோணியை போல் அதிக வெற்றிகளையும் அல்லது கோஹ்லியை போல் வெற்றி சதவீதமும் இல்லை இருப்பினும் கங்குலி சில காரணங்களுக்காக சிறந்த கேப்டன் ஆவார்.
இவரது சாதனைகளுக்கு போட்டியில் இவரது அணுகுமுறையே பெரிதும் உதவியது. குறிப்பாக வெளிநாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றன.
'மேட்ச் பிக்சிங்'ல் ஈடுபட்டு இந்திய கிரிக்கெட் மிகவும் மோசமான நிலைக்க்கு தள்ளப்பட்ட பின்பு 2000 ஆம் ஆண்டு கங்குலி கேப்டனாக பதவியேற்று இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டு கேப்டன் மட்டுமின்றி நல்ல தலைவர் எனவும் நிருபித்தார். இவரது தலைமையில் சச்சின், டிராவிட், லட்சுமன், சேவாக், கும்ப்ளே, ஜாகீர் மற்றும் ஹர்பஜ்ன் போன்ற வீரர்கள் உச்ச 'பார்மில்' இருந்தனர்.
மேலும், இவரது தலைமையில் திறமையான வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் ரன்கள் சேர்க்கும் பேட்ஸ்மென்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதன் காரணமகவே வெளிநாடுகளில் இந்திய அணியினால் சமமாக போட்டியளிக்க முடிந்தன. இன்றளவிலும் கூட வெளிநடுகளில் வெற்றிபெற்ற கேப்டன்களில் முன்னனி கேப்டனாக திகழ்கிறார்.