ஒரு பௌலருக்கு விக்கெட் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் நினைத்த போதேல்லாம் ஒரு பௌலருக்கு விக்கெட் அவ்வளவு எளிதில் கிடைக்காது. தங்களது அணிக்காக எதிரணி பேட்ஸ்மேன்களின் பேட்டிங் நுணுக்கத்தை கவனித்து அதற்கு மாற்றாக பௌலிங் செய்து விக்கெட்டை வீழ்த்த பௌலர்கள் மிகவும் அயராது உழைக்கின்றனர்.
எதிரணி பேட்ஸ்மேன்களை நடுநடுங்க செய்த கடந்த கால பல லெஜன்ட்ரி பௌலர்களை கிரிக்கெட் உலகம் கண்டுள்ளது. ஆனால் ஒரு பௌலரின் இறுதி சர்வதேச போட்டியில் வீசப்படும் கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய நிகழ்வு குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே நிகழ்ந்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய அரிய சாதனையை ஒரு சில தலைசிறந்த பௌலர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளது.
நாம் இங்கு தங்களது இறுதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீசிய கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய 5 பௌலர்களைப் பற்றி காண்போம்.
க்ளென் மெக்ராத்
லெஜன்ட்ரி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த பௌலராக வலம் வருகிறார். ஆஸ்திரேலியாவின் பொக்கிஷமாக விளங்கிய க்ளென் மெக்ராத் தொடர்ந்து சீரான லைன் மற்றும் லென்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். இவர் தனது கிரிக்கெட் வாழ்வின் டெஸ்ட், ஓடிஐ, டி20 இறுதிப் போட்டியில் வீசிய கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றி ஒரு அற்புதமான சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.
க்ளென் மெக்ராத் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வின் இறுதிபோட்டியில் வீசிய கடைசி பந்தை சற்று சுழலும் வகையில் வேகத்தை கூட்டி இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆன்டர்சன்-ற்கு வீசினார். இதனை சரியாக எதிர்கொள்ளத் தவறிய ஆன்டர்சன் நேராக அடிக்க முற்பட்ட போது மைக் ஹாசி-யிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அற்புதமான வேகப்பந்து வீச்சாளரான மெக்ராத் தனது இறுதி ஒருநாள் போட்டியில் வீசிய கடைசி பந்தில் பால் நிக்ஸானை வீழ்த்தினார். மேலும் சர்வதேச டி20யில் பால் காலிங்வுட்-ஐ தனது இறுதி சர்வதேச போட்டியில் வீசிய கடைசி பந்தில் வீழ்த்தினார்.
க்ளென் மெக்ராத்தின் தலைசிறந்த சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் 3 வகையான கிரிக்கெட்டிலும் மொத்தமாக 949 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது.
முத்தையா முரளிதரன்
இலங்கையின் முன்னாள் ஆஃப் பிரேக் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் காலேவில் நடந்த தனது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் கடைசி பந்தில் பிரக்யன் ஓஜா விக்கெட்டை வீழ்த்தினார். தலைசிறந்த பேட்ஸ்மேன்களையும் தனது சுழலில் தடுமாறச் செய்யும் திறன் கொண்ட முத்தையா முரளிதரன் இந்திய கடைநிலை பேட்ஸ்மேனின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை கைப்பற்றி பெரும் சாதனையை படைத்துள்ளார்.
அதிரடி நுணுக்கத்தை இயல்பாகவே தனது பௌலிங்கில் வைத்திருக்கும் முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான போட்டிகளையும் சேர்த்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். (1347)
தனது இறுதி டெஸ்ட் போட்டியில் தான் வீசிய வீசிய கடைசி பந்தை நன்றாக சுழற்றி டாஸ் பந்தாக வீசினார். இதனை சற்றும் எதிர்பாராத பிரக்யன் ஓஜா பேட் கொண்டு தடுக்க முயன்றார். பந்து பேட்டில் பட்டு ஸ்லீப்பில் இருந்த மஹேல்லா ஜெயவர்த்தனேவிடம் சென்றது.