ரிச்சர்ட் ஹாட்லீ

நியூசிலாந்தைச் சேர்ந்த சர் ரிச்சர்ட் ஹாட்லீ ஒரு அற்புதமான இன் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர். இந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளர் நியூசிலாந்து அணியின் ஒரு முன்னணி வீரராக நீண்ட காலம் இருந்தார்.
தனது இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் 86 ரன்களை குவித்த சர் ரிச்சர்ட் ஹாட்லீ, தான் வீசிய அற்புதமான கடைசி பந்தில் இங்கிலாந்தின் டி.மால்கோல்ம் பிளம்ப் விக்கெட்டை கைப்பற்றினார்.
ஒரு சிறந்த அவுட் ஸ்விங் பௌலர் மற்றும் வலதுகை வேகப்பந்து வீச்சாளர் சர் ரிச்சர்ட் ஹாட்லீ தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்வில் 1000+ ரன்கள் மற்றும் 100+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் உலகின் நான்கு இலக்க ரன்களை குவித்த முதல் பௌலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
லாசித் மலிங்கா

குறிப்பிட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட்டின் ஸ்பெஸலிஸ்ட் பௌலராக வலம் வரும் லாசித் மலிங்கா தனது ரௌண்ட் ஆர்ம் பௌலிங் மற்றும் அற்புதமான யார்க்கரின் மூலம் எதிரணி பேட்ஸ்மேனை நடுங்க செய்வார். தான் வீசும் அனைத்து பந்தையும் நேராக ஸ்டம்பிற்கே வீசும் லாசித் மலிங்காவின் பந்தை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவார்கள்.
கொலும்புவில் வங்கதேசத்திற்கு எதிராக மலிங்காவின் கடைசி ஒருநாள் போட்டியில் வீசிய இறுதி பந்தை மிகவும் மெதுவாக சரியான லென்தில் வீசினார். இதனை ஸ்கூப் ஷாட் மூலம் அடித்த முஷ்டபிசுர் ரகுமான், மிட் ஆன் திசையில் இருந்த திசாரா பெரராவினால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது இறுதி போட்டியில் வீசிய கடைசி பந்தை விக்கெட்டாக மாற்றிய வீரர்கள் பட்டியலில் லாசித் மலிங்காவும் இனைந்தார்.
ஆடம் கில்கிறிஸ்ட்

ஆச்சரியமளிக்கும் விதமாக இந்த அரிய வகை சதனைப் பட்டியலில் லெஜன்ட்ரி ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட்டும் இடம்பெற்றுள்ளார்.
ஆனால் இதனை சர்வதேச கிரிக்கெட்டில் இவர் வீழ்த்தவில்லை. இந்தியன் பிரீமியர் லீக்கில் இந்தச் சாதனையை செய்துள்ளார். இந்த சமயத்தில் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தனது கடைசி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹர்பஜன் சிங்கிற்கு இயல்பான சுழலில் வீசினார். அதனை சற்று சிறப்பாக பேட் கொண்டு விளாசினார் ஹர்பஜன் சிங். இதனை பவுண்டரி திசையில் இருந்த குர்கித் மான் கேட்ச் பிடித்தார்.
தலைசிறந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் இந்த விக்கெட்டிற்கு "கங்னம் ஸ்டைல்" நடனம் ஆடி இந்த விக்கெட்டுக்கான மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.