#3) ஜேக் காலிஸ்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் தலை சிறந்த ஆல்ரவுண்டராக கருதப்படுபவர் காலிஸ். டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு போட்டிகளிலும் 250 விக்கெட் மற்றும் 10,000 ரன்கள் என குவித்த ஒரு சில வீரர்களுள் இவரும் ஒருவர். பேட்டிங் மற்றும் பவுலிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகளை படைத்துள்ள இவரால் உலக கோப்பை தொடரில் தன் நாட்டிற்காக கோப்பையை வென்று தர முடியாமல் போனது. 1999ல் அரையிறுதி வரை சென்ற தென்னாப்ரிக்க அணியால் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. இருந்தாலும் தற்போது தனது திறமையினால் பயிற்சியாளராக உருவெடுத்த பல எதிர்கால வீரர்களை உருவாக்கி வருகிறார் இவர்.
#2) சவுரவ் கங்குலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி ரசிகர்களால் தாதா என செல்லமாக அழைக்கப்பட்டார். இவரின் தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்தது. துவக்க வீரராக களமிறங்கிய இவர் சச்சின் டெண்டுலகருடன் இணைந்து சிறந்த துவக்க ஜோடியாகவும் விளங்கினார். 2003ல் இவரது தலைமையில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய ஆனால் இரண்டாம் இடத்தையே பிடிக்க முடிந்தது. 2007 உலகக்கோப்பையில் லீக் போட்டிகளிலேயே இந்திய அணி வெளியேறியதும் இவரின் தலைமையில் தான். இதனால் இவர் கடைசி வரை இவரால் உலகக்கோப்பையை வெல்லமுடியாமலே ஓய்வு பெற்றார்.
#1) ராகுல் டிராவிட்
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தடுப்பு சுவர் என அழைக்கப்படுபவர் டிராவிட். டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்த இவர் ஒருநாள் போட்டிகளிலும் சிம்மசொப்பனமாக விளங்கினார். இவர் தனது நிலையான ஆட்டம் மற்றும் தரமான ஷாட்களால் நேர்த்தியான விளையாட்டை விளையாடும் வல்லமை பெற்றவர். 2007 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார் இவர். ஆனால் அந்த தொடரில் இந்திய அணியானது லீக் போட்டியிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தது. தன்னால் உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் தனது மாணவர்களால் யு 19 உலகக்கோப்பையை இந்தியாவுக்காக வாங்கித்தந்தார் இவர்.