#3.விராட் கோலி
4வது T20 உலகக்கோப்பையில் குருப் ஸ்டேஜில் இந்தியா தனது குழுவில் முதல் அணியாக இருந்ததால் நேரடியாக சூப்பர் 8ற்கு தகுதி பெற்றது.பின் இந்தியாவின் சுமாரான ஆட்டத்தால் ஒரு வெற்றி & ஒரு தோல்வியை பெற்றிருந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவிற்கெதிரான போட்டி இந்திய அணியின் அரையிறுதியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.
தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று ஃபில்டிங்கை தேர்வு செய்தது.ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாப்பிரிக்காவிற்கு இது சம்பிரதாய போட்டியாக இருந்தது.ஆனால் இந்தியாவிற்கு இப்போட்டியில் எதிரனியை 121 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினால் அரையிறுதிக்கு செல்லும் போட்டியாக இருந்தது.
அரையிறுதிக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ரெய்னாவை(45) தவிர யாரும் 30ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை.தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை