#4.தென்னாப்பிரிக்க அணி
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி அனைத்து உலகக்கோப்பையின் மிக முக்கியமான(காலிறுதி, அரையிறுதி) போட்டிகளில் வெளியேறிவிடும் என்ற மோசமான சாதனையை வைத்துள்ளது.அணியின் செயல்பாடு முக்கியமான போட்டிகளில் நன்றாக இருக்காது.2015 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதல் அரையிறுதிப்போட்டியிலும் வழக்கம்போல் தோல்வியை தழுவியது.
தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது . தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்கார்களை நியூசிலாந்தின் டிரேன்ட் போல்ட் தனது மின்னல் வேக பந்துவீச்சில் சொற்ப்ப ரன்களில் வெளியேற்றினார்.வழக்கம்போல் மூன்றாவதாக களமிறங்கிய டுயூபிளஸ்ஸி நிலைத்து நின்று அணியை சரிவில் இருந்து மீட்டார்.ஏ.பி.டிவில்லியர்ஸ் அவருக்கு மறுபுறம் நின்று நல்ல கூட்டணியை கொடுத்தார்.
டேவிட் மில்லர் 18 பந்துகளில் 49 ரன்களை வெழுத்துவாங்கியபோது மழை குறுக்கிட்டது.மழையினால் 43 ஓவருடன் முடித்துக்கொள்ளப்பட்டது. அப்பொழுது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்திருந்தது.டக் வொர்த் லிவிஸ் முறைப்படி 298 ரன்கள் நியூசிலாந்திற்கு இலக்காக தரப்பட்டது.
அரையிறுதிப் போட்டியில் 298 இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் கப்டில் மற்றும் மெக்கல்லம் விக்கெட் இழப்பின்றி 71 ரன்கள் சேர்த்தனர்.மெக்கல்லம் மற்றும் கானே வில்லியம்சன் சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.டெய்லர் மற்றும் கப்டில் சற்று நிலைத்து ஆடினர்.
கோரி ஆண்டர்சன் & கிரான்ட் எலியாட் போட்டியை அதிரடியாக முடித்து வைத்தனர்.கோரி ஆண்டர்சன் ஒரு அற்புதமான அரை சதத்தை அடித்தார்.கிரான்ட் எலியாட் 73 பந்துகளில் 84ரன்களை விளாசி தன் வாழ்நாளில் ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மற்றும் டேல்ஸ்டெயின் வீசிய கடைசிக்கு முந்தைய பாலில் சிக்சரை விளாசி 2015 உலகக்கோப்பை ஃபைனலில் நுழைந்தது நியூசிலாந்து
ஐசிசி போட்டிகளில் அரையிறுதியில் வெளியேறும் சோதனை மற்றுமொன்றாக இப்போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு அமைந்தது.ஸ்டேய்ன்,டுயூபிளஸ்ஸி,ஏபி டிவில்லியர்ஸ் கண்களில் கண்ணீரோடும் பயத்தோடும் மைதானத்தில் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர்.