#2) பிரண்டன் மெக்கல்லம்
கிரிக்கெட் உலகில் எவராலும் மறுக்க முடியாத சிறந்த பீல்டராக திகழ்பவர் மெக்கல்லம். நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர் பேட்டிங்கில் அதிரடியை காட்ட கூடியவர். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தினை பதிவு செய்துள்ளார். ஆரம்ப காலங்களில் இவர் நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பராகவே விளங்கி வந்தார். அதன் பின் இவரின் அசாத்திய பீல்டிங் திறமையை கண்டு இவரை அணி நிர்வாகம் பீல்டராக மாற்றியது. வீரர் அடித்த பந்து பௌண்டரி சென்று விட்டது என அனைவரும் எண்ணும் வேளையில் கடைசி நொடியில் எல்லை கோட்டின் சில மில்லி மீட்டர் இடைவெளியில் கூட அதனை தடுத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார் இவர். ஒருமுறையோ அல்லது இருமுறையோ அல்ல பல முறை இப்படி கடைசி நொடிப்பொழுதில் பௌண்டரியை தடுத்து புதிய சாதனை படைத்துள்ளார் இவர். இதனை மேலே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும். வயது ஆனாலும் இவரின் ஓட்டத்திறனில் எந்த வித பாதிப்பும் வராமல் இன்றளவும் அதே தன்மையுடன் இருப்பதால் இந்த பட்டியலில் இவருக்கு இரண்டாம் இடம் கிடைக்கிறது.
#1) மகேந்திர சிங் தோணி

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன் என அனைவராலும் வர்ணிக்கப்படும் தோணியே இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். வெறும் கால்களை வைத்துக்கொண்டு ஓடுவதே கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங் செய்யும் போது கடினம் தான். ஆனால் இவர் காலில் பேடை கட்டிக்கொண்டு மிக வேகமாக ஓடும் வல்லமை பெற்றவர். முதல் 15 மீட்டரை உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட்டை காட்டிலும் தோணி விரைவில் கடக்கும் தன்மை பெற்றவர் என்பதனை பலமுறை நிரூபித்துள்ளார் தோணி. இவரின் மின்னல் வேக ஓட்டங்களிலேயே மறக்கமுடியாதது டி20 உலககோப்பை தொடரில் வங்கதேச அணிக்கெதிரான போட்டியின் கடைசி பந்தில் ரன் அவுட்டாகியது தான்.