இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறி உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் பெரும்பாலாக விளையாடப்படும் விளையாட்டு கிரிக்கெட்டே. தற்போது இந்திய அணி 2019 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம். அதனால் அணியில் மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவதும் இளம் வீரர்கள் அறிமுகமாவதும் இயல்பே. அதுபோன்று 2019-ல் இந்திய அணியில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் வீரர்களைப் பற்றி இந்த தொகுப்பு விவரிக்கிறது.
#5 ராஜ்னேஷ் குர்பானி
ராஜ்னேஷ் குர்பானி கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் அனைவரையும் கவர்ந்த வீரர் ஆவார். 25 வயதான இவர் விதர்பா அணிக்காக ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். இவர் கடந்த ரஞ்சி கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த தொடரில் இவர் வெறும் 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் புவனேஷ்வர் குமார் போன்று பந்து வீசுவதாக கூறப்படுகிறது. 11 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர் 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பந்து வீச்சு சராசரி வெறும் 19.2 ஆகும். அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இளம் பந்து வீச்சாளரை தேர்வு செய்யும் பட்சத்தில் இவரே முதல் தேர்வாக இருப்பார்.
#4 இஸ்ஸான் கிஷான்
20 வயது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இஸ்ஸான் கிஷான் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற யு-19 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். அந்த தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் கடந்த இரு ஆண்டுகளாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான இவர் முதல் தர போட்டிகளில் 2398 ரன்கள் குவித்துள்ளார். இவரது சராசரி 40.6 ஆகும். உள்ளூர் போட்டிகளில் 40+ சராசரி வைத்துள்ள விக்கெட் கீப்பரும் இவரே. ரிசப் பந்த்-யை விட சிறந்த வீரரான இவர் மிக விரைவில் அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#3 நவ்தீப் சய்னி
டெல்லியைச் சேர்ந்த 26 வயது வேகப்பந்து வீச்சாளரான இவர் கடந்த வருடம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இவருக்கு அந்த போட்டியில் விளையாடும் Xl-ல் இடம் கிடைக்கவில்லை. இவர் உள்ளூர் போட்டிகளில் 39 போட்டிகளில் 110 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சராசரி வெறும் 28.2 ஆகும். உலகக்கோப்பைக்கு பின் உருவாகும் இந்திய அணியில் இவருக்கு இடமுண்டு.
#2 சபாஷ் நதிம்
29 வயதான சபாஷ் நாதிம் உள்ளுர் மற்றும் முதல் தர போட்டிகளில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டும் இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் சுழல் பந்து சிறப்பாக வீசக்கூடியவர். இவர் விஜய் ஹசாரே தொடரில் வெறும் 10 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனையை படைத்தார். இவருக்கு 2019-ல் கண்டிப்பாக இந்திய அணியில் இடமுண்டு.
#1 சுப்மான் கில்
சுப்மான் கில் இந்திய அணியின் அடுத்த விராத் கோலி என அழைக்கப்படுகிறார். இந்த வருடம் நடைபெற்ற யு-19 உலக்கோப்பை தொடரில் துணை கேப்டனாக செயல்பட்டார். இவர் அந்த தொடரில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார். அவரது சராசரி 100க்கும் மேல் அந்த தொடரில் வைத்துள்ளார். 19 வயதான இவர் கடந்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக ஆடினார். தற்போது நடக்கும் ரஞ்சி கோப்பை தொடரிலும் 240 ரன்கள் மற்றும் அடுத்த போட்டியிலேயே சதத்தினையும் அடித்து அசத்தினார். இவருக்கு அடுத்த வருட இந்திய அணியில் 100% இடமுண்டு. விரைவில் இவரை இந்திய அணியில் காண்போம்.