2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு சவாலான ஆண்டாகவே அமைந்தது. இந்திய அணி பெரும்பாலும் வெளிநாட்டு தொடர்களிலேயே விளையாடியது. தென்ஆப்ரிக்கா , இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என வலுவான அணிகளுடன் அவர்களது நாட்டிலே விளையாடியது இந்திய அணி. இது மட்டுமல்லாமல் இலங்கை-யில் நிதகாஷ் டிராபி முத்தரப்பு போட்டியும், ஐக்கிய அரபி எமிட்ரேஸ் நாட்டில் ஆசியக்கோப்பை தொடரையும் விளையாடியது. இதில் இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் வெற்றியை கண்ட போதிலும் சில ஆட்டங்களில் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. அதற்கு காரணம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பந்து வீச்சு ஆகும். குறிப்பாக இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் தொடரை இழந்தது. கே எல் ராகுல், மணீஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கு பிசிசிஐ வாய்ப்புகளை வாரி வழங்கிய போதிலும் அவர்கள் அதை பயன்படுத்தாமல் ஏமாற்றத்தை அளித்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் ஏனைய வீரர்கள் நமக்கு ஏமாற்றத்தை அளித்தனர். அவர்களில் சிலரை இங்கு காண்போம்.
#5 ஜெயதேவ் உனத்கட்
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் ஜெயதேவ் உனத்கட். இதன் மூலம் இவர் பெரிதும் பேசப்பட்டார். ஜாகிர்கான் மற்றும் ஆசிஷ் நெக்ராவிற்கு பிறகு இந்திய அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளரும் ஜொலிக்கவில்லை. இவர் அந்த இடத்தை பூர்த்தி செய்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் சொதப்பினார். உனத்கட் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பிடித்தார். ஆனால் இவரது பந்து வீச்சு அங்கு எடுபடவில்லை. இவர் அந்த தொடரில் 2 ஆட்டங்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். இவரது பந்துவீச்சு எகானமி 9.78 என அதிகமாக வைத்திருந்தார். இதன் பின் நிதகாஷ் டிராபி தொடரில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். அதிலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. 4 போட்டிகளில் விளையாடிய அவர் 9.93 என அதிக எகானமியை வைத்திருந்தார். இவருடைய சொதப்பலின் காரணமாக இந்திய அணியிலிருந்து இவர் நீக்கப்பட்டார். இதன்பின் இவர் அணியில் சேர்க்கப்படவே இல்லை. இந்த வருட ஐபிஎல் போட்டியிலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
#4 மணீஷ் பாண்டே
இந்திய அணி எந்தவொரு டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான வீரர்களை அறிவித்தாலும் அது அனைத்திலும் இருக்கும் வீரர்களில் இவரும் ஒருவர். இவருக்கு வழங்கிய அளவுக்கு வேறு எந்த வீரருக்கும் பிசிசிஐ நிர்வாகம் வாய்ப்பு அளித்ததில்லை. அப்படி இருந்தும் இதில் ஒரு வாய்ப்பை கூட பயன்படுத்திகொள்ளாதவர் மணீஷ் பாண்டே. 2013 ஆம் ஆண்டு இவர் ஆஸ்திரேலியா-வில் சதமடித்து இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். அதன் பின் இவர் எந்தவொரு போட்டியிலுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. பீல்டிங்-ல் சிறப்பாக செயல்படுபவர் இவர் அதுமட்டுமின்றி யோ-யோ உடல் தகுதி தேர்விலும் அதிக புள்ளிகளைக் கொண்ட வீரரும் இவரே. கடைசியில் பிசிசிஐ நிர்வாகம் இவரை 2019 ல் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இவரை சேர்க்கவில்லை.