#3 முரளி விஜய்
தமிழ் நாட்டைச்சேர்ந்த முரளி விஜய், இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக பெரிதும் அறியப்பட்டவர். இதுவரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இவர் 2018-ல் டெஸ்ட் போட்டிகளில் அந்த அளவிற்கு விளையாடவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்த இவரால் இங்கிலாந்து நாட்டின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்ட இவர் 4 இன்னிங்ஸ்ல் வெறும் 89 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் முரளி விஜய் இந்த தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார். சர்வதேச போட்டிகளில் இதுவே இவரது கடைசி ஆண்டாக இருக்கும் என கருதப்படுகிறது.
#2 மகேந்திர சிங் தோனி
இந்த வரிசையில் இரண்டாமிடம் வகிப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் அணியின் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி. ஒரு காலகட்டங்களில் தோனி களத்தில் இருந்தாலே அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் ஏறும் . ஆனால் இப்போது அவர் களத்தில் இருந்தாலே ஸ்கோர் ஆமை போல் நகர்கிறது என பல நெட்டிசன்கள் வலம்வரும் வேளையில் இவரும் அதற்க்கேற்றார் போல் விளையாடி வருகிறார். இவர் களத்தில் வந்து செட்டில் ஆவதர்க்கே 20-40 பந்துகளை வீணடிக்கிறார். இந்த வருடத்தில் இவரது சராசரி வெறும் 25 , ஸ்ட்ரைக்ரேட் 71 மிகக்குறைவாகக் கொண்டுள்ளார். இதன் காரணமாக இவர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இருந்து கழட்டி விடப்பட்டார். தற்போது, இவர் மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். 2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு பெறுவார் என நம்பப்படுகிறது.
#1 கே எல் ராகுல்
இந்த வரிசையில் முதலிடம் வகிப்பவர் லோகேஷ் ராகுல். இந்திய அணியில் அடுத்த விராட் கோலி என அழைக்கப்பட்டவர் ராகுல் . இவர் அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரரான இவர் இந்த வருடத்தில் ஒரேயொரு சதத்தினை மட்டுமே அடித்துள்ளார். அதைத் தவிர மற்ற ஆட்டங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளிலும் இவர் ஒரு சதத்தினை அடித்துள்ளார். மற்ற போட்டிகளில் இவர் இவரது சராசரி மிகவும் குறைவு. இவர் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையிலும் இவரை மீண்டும் அணியில் இடம் பிடிப்பது ஆச்சர்யமாக உள்ள நிலையில் தற்போது இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம்பெற்றுள்ளார்.