நீங்கள் சிறு வயதில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு ஆட்டத்தின் இரு தொடக்கம் ஓவர்களையும் கையாண்டது உண்டா? அப்படி இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இவ்வாறே, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த வீரர்களும் கூட ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கண்டதில்லை. இத்தகைய அரிய சாதனையை புரிந்த வீரர்கள் வெகு சிலரே. அணியில் பன்முகத்தன்மை கொண்ட சிறந்த ஆல்ரவுண்டர்கள் மட்டுமே இத்தகைய அரிய வகை சாதனையை புரிந்துள்ளனர். அவர்கள் மட்டுமல்லாது, சிலநேரங்களில் பகுதிநேர பந்துவீச்சாளராக உருவெடுக்கும் தொடக்க பேட்ஸ்மேன்களும் கூட இவ்வகை சாதனைகளை கிரிக்கெட் உலகில் அரங்கேற்றியுள்ளனர். எனவே, ஒரே ஒரு நாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடக்க ஓவர்களை கையாண்ட 5 இந்திய வீரர்களை பற்றி இந்த தொகுப்பு எடுத்துரைக்கின்றது.
#5.ரோஜர்ஸ் பின்னி:
ஸ்விங் வகை பந்து வீச்சிற்கு பெயர் போன ரோஜர்ஸ் பின்னி, இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 77 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்க ஓவர்களில் நன்கு எடுபடும் இவரது ஸ்விங் வகை பந்துவீச்சு எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்துள்ளது. இவர் வெறும் இரு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டுள்ளார். அதுவும் 1980-81 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரு ஒரு நாள் போட்டிகளில் இவர் ஆட்டத்தின் தொடக்கம் பேட்ஸ்மேன் ஆகவும் இன்னிங்சை தொடங்கி, பந்துவீச்சாளராகவும் திகழ்ந்துள்ளார். முதல் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டிகளில் முறையே பேட்டிங்கில் 31 மற்றும் 27 ரன்களை குவித்துள்ளார். அந்த இரு போட்டிகளிலும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உடன் இணைந்து பேட்டிங்கை துவங்கினார், பின்னி. துரதிஷ்டவசமாக அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இருப்பினும், 1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு ரோஜர் பின்னி முக்கிய காரணமாய் விளங்கினார்.
#4.மனோஜ் பிரபாகர்:
1990களில் தொடக்கத்தில் இந்திய அணியின் நிரந்தர வீரரான மனோஜ் பிரபாகர், தனது பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்த கூடியதாகவும் திகழ்ந்துள்ளார். அதுவும் குறிப்பாக, புதிய பந்தில் ஸ்விங் தாக்குதலை தொடுத்துள்ளார். இதுவரை இவர் விளையாடியுள்ள 130 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இவர் வெறும் பந்துவீச்சாளர் மட்டுமின்றி, அணிக்கு ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும் திறந்துள்ளார். பேட்டிங்கில் 11 அரை சதங்களையும் 2 சதங்களையும் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோராக 106 ரன்கள் பதிவாகியுள்ளது. பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ள மனோஜ் பிரபாகர், இந்திய அணிக்கு தொடக்க பேட்ஸ்மேனாகவும் களமிறக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளார். ஒட்டு மொத்தமாக 45 ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தொடக்க ஓவர்களை கையாண்டுள்ளார். மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டமையால் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக இவரது ஒருநாள் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.