2019 உலகக் கோப்பை தொடர் சிறப்பாக ஆரம்பித்து நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இவ்வருட உலகக் கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியும், இறுதிப் போட்டியிலும் பங்கேற்கும். உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் இந்திய-பாகிஸ்தான் மோதும் போட்டியை அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர். உலகக் கோப்பை என்பது பல முண்ணனி நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் இடங்களாக உள்ளது. குறிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டத்திறன் தற்போது வெளிபட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உற்சாகப் படுத்தி வருகின்றனர்.
கடந்த உலகக் கோப்பை தொடர்களில் அதிக புதிய விளம்பரங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வந்தன. 2015 உலகக் கோப்பை தொடரில் "மோக்கா மோக்கா" என்ற பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ஆப்பிள் சிங் விளம்பரத்தை 1999 உலகக் கோப்பை தொடரில் ESPNcricinfo நிறுவனம் வெளியிட்டது. நாம் இங்கு 2019 உலகக்கோப்பை தொடரை மையமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 5 விளம்பரங்களை காண்போம்.
1) ஷாக் தெம் (#SockThem - PUMA)
PUMA நிறுவனம் விராட் கோலியை மையமாக கொண்டு ஒரு சிறப்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் அதிரடியான பேட்டிங் திறனை கொண்டு #SockThem என்ற ஒரு பாடல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இந்திய ரப் பாடகர் டிவைன் பாடியுள்ளார். இப்பாடல் இந்திய ரசிகர்களை அதிக உற்சாகமூட்டும் வகையில் உள்ளது. ரசிகர்கள் இந்தப் பாடலால் உந்தப்பட்டு இந்திய அணிக்கு அதிக உற்சாகமூட்டி வருகின்றனர்.
பாடலின் இடையே உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்டிவன் ஸ்மித்திற்கு ஆதரவாக அளித்த சைகை இடம்பெற்றுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் கோலியை சதம் விளாச விட மாட்டோம் என்று கூறிய பேட் கமின்ஸின் வார்த்தைகளும் இடம்பெற்று, அத்துடன் முதல் போட்டியிலேயே விராட் கோலி விளாசிய சதமும் அதன்பின் அவர் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது. #SockThem பாடலானது, உங்களது எதிரணியை உங்கள் பலத்தினால் வீழ்த்துங்கள், வார்த்தைகளால் வீழ்த்தாதிர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
2)அவர் மொமெண்ட் இஸ் நவ் (#OurMomentIsNow - Daniel Wellington)
டேனியல் வெல்லிங்டன் தான் உருவாக்கிய பாடலில் இந்திய ரசிகர்களின் உணர்வுகள் மற்றும் உற்சாகத்தை வெளிபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்திய அணியை முழுவதும் இனைத்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுந்த திறனை இந்திய வீரர்கள் வெளிகொணர வேண்டும். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி தங்களது ரசிகர்களுக்கு செய்தி அனுப்பும் வகையில் இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலில் முன்னணி நடிகர் ஆயூஸ்மான் காரானா நடித்துள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தங்களது வெளிபாட்டை எவ்வாறு வெளிபடுத்துவது என்று பேசுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயங்களை குறைத்து எதிரணியை வீழ்த்தி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற வாசகங்கள் இப்பாடலில் உள்ளது. அத்துடன் ரசிகர்களின் உற்சாகம் இந்திய வீரர்களின் பயத்தை போக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் குறிப்பாக இரு புதிய கை கடிகாரங்களை ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் விற்கும் நோக்கத்திலே உருவாக்கப்பட்டது. இந்த கைகடிகாரம் வெள்ளை மற்றும் முட்டை ஓடு வெள்ளை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் ஊதா நிறத்திலும் அதன் நிறங்கள் உள்ளன. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த கைகடிகாரத்தை வாங்கி உலகக் கோப்பை கிரிக்கெட் பாக்ஸை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் கிரிக்கெட் ரசிகருக்கான அடையாள அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியை உற்சாகப் படுத்தி மூன்று இந்திய அணி கிரிக்கெட் ஜெர்ஸியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.