2019 உலகக் கோப்பை தொடரை மையாமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 நிறுவன விளம்பரங்கள்

ICC WORLD CUP-2019
ICC WORLD CUP-2019

3) ஃப்ளை டு லண்டன் (Fly to London - Coca Cola)

இந்திய நட்சத்திர நடிகர்களான பரேஷ் ரவால் மற்றும் ரன்பீர் கபூர் ஆகியோர் இனைந்து கொக்க்கோல நிறுவனத்தின் விளம்பரமான Fly To London என்ற வாசகத்தில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் கோக் குளிர்பானத்தை அருந்திக் கொண்டு தொலைக்காட்சியில் உலகக் கோப்பை போட்டியை பார்த்துக் கொட்டிருந்தனர். ரன்பீர் கபூர் கோக்கை பரேஷ் ரவாலுக்கு ஒரு சொட்டு கொடுத்தார். ஆனால் ரவால் எனக்கு ஏற்கனவே சலுகை வழங்கப்பட்டது மற்றும் ஏன் நாம் இருவரும் உலகக் கோப்பை காண இங்கிலாந்து செல்ல கூடாது என ரன்பீர் கபூரிடம் கேட்டார்‌. பரேஷ் ரவால், போட்டியில் பங்கேற்று வென்று தன்னை காணும் வாய்ப்பு மற்றும் 2019 உலகக் கோப்பையை காணும் வாய்ப்பை பெறுங்கள் என ரன்பீர் கபூரிடம் சவால் விடும் வகையில் இந்த விளம்பரத்தில் பேசியுள்ளார்.

இந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்ட சலுகையாவது, கோக் பாட்டிலுக்கு பின் தாளில் உள்ள எண்களை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி குலுக்கலில் வெல்லும் அதிர்ஷ்ட சாலிகளுக்கு லண்டன் சென்று உலகக் கோப்பை காணும் வாய்ப்பு பெறுவார்கள்.

youtube-cover

4)சோமாட்டோ கிரிக்கெட் கப் (Zomato Cricket Cup)

ஜோமாட்டோ தத்ரூபமாக தனது விளம்பரத்தை வடிவமைத்துள்ளது. அதாவது உலகக் கோப்பை போட்டிகளை பார்த்து கொண்டிருக்கும் போது உணவு தேவைப்பட்டால் உடனே டெலிவரி செய்வது போல் வடிவமைத்துள்ளது. ஜோமெட்டோ மொபைல் செயலியில் அந்நிறுவனம் நடத்தும் ஒரு சிறிய கணிப்பு போட்டிகளில் வெல்பவர்களுக்கு 100 சதவீத சலுகை உணவு ஆர்டர் செய்யும் போது கிடைக்கும் என தெரிவித்துள்ளது. பொதுவாக 3 கேள்விகள் அந்த சிறிய கணிப்பு போட்டியில் கேட்கப்படும். இதற்கு தகுந்த பதிலை அளிப்பவர்களுக்கு 100 சதவீத சலுகையை அந்நிறுவனம் வழங்குகிறது.

இது தனது வாடிக்கையாளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த சலுகையை மற்றும் இந்நிறுவனம் அளித்துள்ளது. காலத்திற்கு ஏற்ப இந்த சலுகையை பயன்படுத்தி கொண்டு வெற்றி பெற்று தங்கள் பசியை போக்கி கொள்ளுங்கள் என்ற வாசகம் அந்த விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது. ரசிகர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து சலுகையை வழங்குகிறது ஜோமேட்டோ. முதல் கேள்விக்கு 25%, இரண்டாவது கேள்விக்கு 50%, மூன்றாவது கேள்விக்கு 100% போன்ற விதத்தில் சலுகையை அளித்து வருகிறது.

5) கிரிக்கெட் ஓட கிரௌன் (Cricket ka Crown Hum Le Jayenge - Star Sports)

youtube-cover

2019 உலகக் கோப்பை தொடரை வைத்து ஒரு பாடல் வடிவில் ஸ்டார் நிறுவனம் ஒரு வேடிக்கையான விளம்பரம் ஒன்றை வடிவமைத்துள்ளது. உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறவதையடுத்து அந்நாட்டு ராணி அனைவரையும் வரவேற்று பேசிக் கொண்டுள்ளார். திடீரென கூட்டத்திலிருந்து வெளியே வரும் சில ரசிகர்கள் தங்களது விருப்ப அணியின் ஜெர்ஸியை அணிந்து முன்னாள் வந்து வேடிக்கை காட்டுவது போல் நடனமாடுகின்றனர்.

தங்களது உணர்ச்சிகளை வெளிபடுத்தி தங்கள் விருப்ப அணி உலகக் கோப்பையை வெல்லும் என வாதடுவது போல் பாடல் பாடுகின்றனர். அத்துடன் இந்தியா விளையாடும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் சில வேடிக்கையான விளம்பரங்களை ஸ்டார் நிறுவனம் வடிவமைத்து வெளியிடுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications