இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த தொடர் ஒவ்வொரு ஆட்டக்காரர்களுக்கும் குறிப்பாக பேட்ஸ்மென்களுக்கு தங்களின் கால்தடத்தை பதிப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பாகும்.
இன்றைய காலகட்டத்தில் இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப விளையாடுவது ஒவ்வொரு பேட்ஸ்மென்களுக்கு பெரும் சவாலாக உள்ளது .குறிப்பாக, இவ்வாறான சூழ்நிலையில் ஒரு தலை சிறந்த பேட்ஸ்மேன்களின் திறமையானது சோதிக்கப்படுகிறது. இருப்பினும், 2015 உலகக் கோப்பைக்கு பின்னர் இங்கிலாந்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்களே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேலும் ஐசிசி கருத்துக்கணிப்பு குழுவானது கூறுகையில், தற்போது இங்கிலாந்தின் சீதோஷ்ன நிலையை பொருத்தவரையில் ஏறக்குறைய 90 ஓவர்கள் ஆட்டம் நீடிப்பது என்பது எளிதான விஷயம் ஆகும் .மேலும் ,பெரிய இலக்குகள் மட்டுமே அரங்கேற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். 2015 உலகக் கோப்பை முதல் இதுவரை இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களில் அதிக ரன்களை குவித்து இந்த 2019 உலகக் கோப்பையிலும் அதிக ரன்களை குவிக்கவுள்ள ஐந்து பேட்ஸ்மேன்கள் பற்றி காணலாம்.
#1. ஷிகர் தவான்:
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான தவான் ஆட்டத்தின் போக்கை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லக்கூடிய மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு முன்னணி பேட்ஸ்மேன் ஆவார் .இவர் இதுவரை இங்கிலாந்தில் 976 ரன்களை குவித்துள்ளார். மேலும், இதற்கு சான்றாக இவர் அதிரடியாக விளையாடிய இரண்டு சாம்பியன்ஸ் ட்ராபியை குறிப்பிடலாம்.இந்த இரண்டு சாம்பியன்ஸ் டிராபி லீக்கில் (2013 மற்றும் 2017 )அதிக ரன்களை விளாசிய ஆட்டக்காரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம்முறையும் இவருடைய பங்களிப்பு இந்தியாவிற்கு நிச்சயம் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும்.
கடந்த 2015 உலகக் கோப்பையில் தவான் 458 ரன்களும் 56.25 என்ற ஆவரேஜயும் கொண்டுள்ளார். 2017 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி அவருடைய பேட்டிங் திறமைக்கு எடுத்துக்காட்டாகும். அப்போது இவர் நிகழ்த்திய சதமானது இந்தியாவின் வெற்றியை நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது .காலச்சூழலுக்கு ஏற்ப விளையாடுவது என்பது கடினமான ஒரு விஷயமாகும். ஆனால், தவான் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கையாளத் தெரிந்த ஒரு நல்ல ஆட்டக்காரர் ஆவார்.
#2. விராத் கோலி:
சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர், விராத் கோலி. எனவேதான் ,ரசிகர்கள் இவரை "ரன் மெஷின்" என்று அழைக்கின்றனர் . சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை குவித்த இவர் இங்கிலாந்திலும் தொடர்ந்து 54.56 என்ற ஒரு நல்ல ஆவரேஜ் கொண்டுள்ளார். இருப்பினும் 2015 முதல் இவருடைய ஆவரேஜ் 89.80 ஆக வெறும் எட்டே இன்னிங்சில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .ஆச்சரியமூட்டும் விதமாக இவர் ஒரு சதத்தைக்கூட நிகழ்த்தவில்லை என்றாலும் , அதிகபட்சமாக 96 ரன்களை பங்களாதேஷ் எதிரான போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.
மேலும், சாம்பியன்ஸ் டிராபி 2017 -இல் இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 81 ரன்களை 68 பந்துகளில் விளாசினார். அப்போது இந்தியாவானது 319 என்ற பெரிய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. எனினும் ,இறுதிப் போட்டியில் அவர் முகமது அமீர் வீசிய பந்தில் தன் விக்கெட்டை இழந்தார். எனவேதான் ,இது பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்புக்கு விதை போட்டது. இதனை ஈடுகட்டும் விதமாக கோலி, நிச்சயம் ஒரு நல்ல ஆட்டத்தை ஜுன் 16-ஆம் தேதி நடைபெற்றவுள்ள போட்டியில் வெளிப்படுத்தி கடினமான ஒரு இலக்கை நிர்ணயிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#3.ராஸ் டெய்லர்:
நியூசிலாந்தை சேர்ந்த ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர், ராஸ் டெய்லர். மேலும், கேள்விக்கிடமின்றி அதிக ரன்களை குவிக்க கூடிய இவர் 2015 உலகக் கோப்பையில் சரியாக விளையாடவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும்,அதற்கு பின்னர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 2892 ரன்களும் 64.8 ஆவரேஜயும் கொண்டு தான் ஒரு அசாத்தியமான ஆட்டக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்கு ஆண்டுகளில் 523 ரன்களையும் 74.21 என்ற ஆவரேஜயும் கொண்டுள்ள இவர் ,2015-இல் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக விளையாடி தொடர்ச்சியாக சதங்களை விளாசியுள்ளார். முதல் போட்டியில் 83 பந்துகளில் சதத்தை விளாசிய இவர், அடுத்த போட்டியில் கேன் வில்லியம்சன் உடன் சேர்ந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கொண்டு 398 என்ற பெரிய இலக்கையும் நிர்ணயித்தனர்.
அதுமட்டுமல்லாது, தொடர்ச்சியான அடுத்தடுத்த போட்டிகளிலும் டெய்லரும் கேன் வில்லியம்சன் சேர்ந்து இரட்டைச் சதங்களை விளாசி மற்ற அணிகளுக்கு பெரும் சவாலாக இருந்தனர் .மேலும், அந்தப் போட்டியில் அந்த அணியானது 303 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#4. ரோகித் சர்மா:
இந்தியாவின் தொடக்க அதிரடி ஆட்டக்காரரான இவர், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ச்சியான தன்னுடைய சிறப்பான ஆட்டங்கள் மூலமாக கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். 2015 -ஆம் ஆண்டு உலகக் கோப்பை பிறகு, இங்கிலாந்துக்கு எதிராக தொடர்களில் 458 ரன்களை விளாசிய இவர், 76.33 ஆவரேஜயும் கொண்டுள்ளார். மேலும், இவரது அசாத்தியமான 2 சதங்களை விளாசியதில் ஒன்று இங்கிலாந்துக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா-வங்காளதேசுக்கு இடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் சரியாக விளையாடிய ரோஹித் சர்மா தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டு இங்கிலாந்தின் நாட்டிங்கம்மில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 137 ரன்கள் விளாசியுள்ளார், ரோஹித் சர்மா. இவ்வாறாக அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான பல்வேறு போட்டிகளில் வெற்றியைத் தேடித்தந்துள்ளார். இவ்வாறாக, தன்னுடைய அசாதாரணமான ஆட்டத் திறன்களை வெளிப்படுத்தும் ரோகித் சர்மா இந்த உலக கோப்பை போட்டிகளிலும் இந்தியாவிற்கு ஒரு நல்ல அடித்தளத்தை அமைத்தார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
#5. கேன் வில்லியம்சன்:
உலகின் நான்கு திறமையான இளம் ஆட்டக்காரர்களில் ஒருவர், கேன் வில்லியம்சன். எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகளிலும் ஆட்டத்தின் போக்கை தன் வசப்படுத்தும் தன்னிகரில்லா ஆட்டக்காரர். இவர் நியூசிலாந்தின் முக்கிய துருப்பு சீட்டு என்றும் கூறலாம். கேன் வில்லியம்சன் இதுவரை இங்கிலாந்தில் 640 ரன்களை விளாசியுள்ளார். மேலும் இவருடைய ஆவரேஜ் 80-ஆகஉள்ளது. 2015 உலகக் கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக ரன்களை குவித்துவரும் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
எடுத்துக்காட்டாக, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவர் அடித்த 93 ரன்கள் நியூசிலாந்தை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. இதுமட்டுமல்லாது, 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இவருடைய தொடர்ச்சியான சதங்களும் இதில் அடங்கும். இங்கிலாந்தின் சீதோசன நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் கேன் வில்லியம்சன் சிறந்து விளங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவேதான், 2019 உலகக் கோப்பை போட்டியில் கேன் வில்லியம்சனின் பங்களிப்பு நியூசிலாந்து அணிக்கு பெரும் வெற்றி வாய்ப்பைத் தரும் என்றே கூறலாம்.