"பல முறை தோனியுடன் சேர்ந்து பயிற்சி ஆட்டத்தில் பேட் செய்கிறேன், நிறைய நேரம் அவருடன் செலவிடுகிறேன். மேலும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மகேந்திர சிங் தோனியை பார்க்கும் போது ஒரு நல்ல நம்பிக்கை பிறக்கிறது. அவர் ஒரு நல்ல சிறந்த பேட்ஸ்மேன். தோனியின் ஆன்மாவிலேயே கிரிக்கெட் விளையாட்டானது புதைந்துள்ளது" என ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை தோனியுடன் சேர்ந்து வெளிப்படுத்திய கேதார் ஜாதவ் நேற்று தெரிவித்துள்ளார்.
237 என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்து தடுமாறிய போது கேதார் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி பொறுமையுடன் விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். கேதார் ஜாதவ் 81 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதினை வென்றார். தோனி 72 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்களை எடுத்தார்.
ஆட்டம் முடிந்த பிறகு தோனியை பற்றி கேதார் ஜாதவ் இவ்வாறு புகழ்ந்து தள்ளியுள்ளார். தோனி அவருடன் விளையாடும் சக வீரர்களை ஊக்குவிப்பதில் வல்லவர். நாம் இங்கு தோனியின் தலைமையில் மட்டும் சிறப்பாக விளையாடி மற்ற கேப்டன்களின் தலைமையில் விளையாடும் போது சொதப்பிய 5 கிரிக்கெட் வீரர்களை பற்றி காண்போம்.
#5: ஈஸ்வர் பாண்டே
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஈஸ்வர் பாண்டே திகழ்கிறார். 2012-13ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். அதற்கு பரிசாக 2013 ஐபிஎல் தொடரில் புனே வாரியர்ஸ் இந்தியா அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவருக்கு 2 போட்டிகளில் மட்டுமே பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. இதில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
2014 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். தோனியின் தலைமையில் விளையாடிய ஈஸ்வர் பாண்டே 23 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடக்க ஓவரை வீசுவதில் வல்லவராக திகழ்ந்து ரன் அதிகம் தனது பௌலிங்கில் கொடுக்காமல் மிகவும் சிறப்பாக பந்து வீசுவார். ஈஸ்வர் பாண்டே தோனியின் தலைமையில் சிறப்பாக விளையாடினார். அதன்பின் இந்திய-ஏ அணியில் விளையாடி, நியூசிலாந்து தொடரில் தேசிய அணியில் இடம்பெற்றார்.
தற்போது ஈஸ்வர் பாண்டே உள்ளுர் கிரிக்கெட்டில் மத்தியப்பிரதேசம் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் முதல் சுற்று முடிந்த முஷ்டாக் அலி கோப்பையில் ஈஸ்வர் பாண்டே 6 போட்டிகளில் பங்கேற்று 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
#4: ஷதாப் ஜகாதி
கோவா கிரிக்கெட் அணியில் முக்கிய வீரராக திகழ்ந்தவர் ஷதாப் ஜகாதி. ஸ்வப்நில் அஸ்நோட்கர், ஷதாப் ஜகாதி ஆகிய இரு கோவா கிரிக்கெட் வீரர்கள் இந்திய பிரிமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றனர்.
ஜகாதி தொடர்ந்து இரு போட்டிகளில் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை டி20 வீரராக அறிவித்துக் கொண்டார். உள்ளூர் கிரிக்கெட்டில் இவரது சிறப்பான ஆட்டத்திறனால் 2009 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
தென்னாப்பிரிக்காவில் நடந்த இந்த ஐபிஎல் தொடரில் அருமையாக விளையாடிய ஜகாதி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் பங்கேற்று 7.36 என்ற எகனாமிக்களுடன் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த வருடத்தில் ஐபிஎல் கோப்பையையும் வெல்ல காரணமாக இருந்தார். சமீபத்தில் எம்.எஸ்.தோனி பற்றி இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஜகாதி கூறியதாவது: "எம்.எஸ்.தோனி ஒரு சிறந்த கேப்டன். இவரது அனுபவம் இளம் வீரர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்" என கூறியுள்ளார்.
தற்போது ஜகாதி, கோவா அணியை டி20 போட்டிகளில் வழிநடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் விளையாடிய போது தனது பௌலிங்கில் 44 ரன்களை அளித்து 1 விக்கெட்டை ஆந்திரப் பிரதேசம் அணிக்கு எதிராக வீழ்த்தினார்.
#3: பவான் நெகி
பவான் நெகி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய போது மிகப்பெரிய ஹிட்டராக திகழ்நதார். இவர் பேட்டிங்கில் நீண்ட தூரத்திற்கு அடிக்கும் திறனையும் , பௌலிங்கில் சுழற்பந்து வீச்சாளராகவும் திகழந்து ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். டெல்லி ஆல்-ரவுண்டரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையில் விளையாடிய போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் பவான் நெகி. 2016 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் 4வது ஸ்பின்னராக இந்திய அணியில் விளையாடினார். 2016 ஐபிஎல் தொடரில் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத ஒரு வீரருக்கு ஐபிஎல் தொடரில் அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். 2017 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை பவான் நெகி வீழ்த்தினார்.
தற்போது, முஷ்டாக் அலி கோப்பையில் 26 வயதான் பவான் நெகி விளையாடி வருகிறார். முதல் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார் பவான் நெகி.
#2: ஜோஹிந்தர் சர்மா
எம்.எஸ்.தோனியின் முதல் அடையாளமாக திகழும் 2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜோஹிந்தர் சர்மா கடைசி ஓவரை சிறப்பாக வீசியதன் காரணமாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. மிஸ்பா-உல்-ஹக் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
தோனி ஜோஹிந்தர் சர்மாவை நம்பி இறுதி ஓவரை அவரிடம் அளித்தார். இவரது பௌலிங்கில் அகலப்பந்து மற்றும் சிக்ஸர் சென்ற நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். இந்த நியாபகங்கள் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மனதிலும் அச்சாணி போல் பதிந்திருக்கும்.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஜொஹிந்தர் சர்மா , தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடினார். 2011 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இவர் 16 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 4 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பாகவும் விளையாடியுள்ளார். 2011ல் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு சர்வதேச அணிக்கு இவரால் மீண்டும் திரும்ப இயலவில்லை.
தற்போது இவர் ஹரியானாவில் காவலராக பணிபுரிகிறார். கடைசியாக இவர் விளையாடிய கிரிக்கெட் போட்டி, ஸ்டே.மார்டிஜீல் நடந்த டைமன்ட் vs ராயல்ஸ் போட்டியில் பங்கேற்றது தான்.
#1: மோஹித் சர்மா
ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார் மோஹித் சர்மா. 2013 ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை அணியில் இடம்பெற்ற இவர், 15 போட்டிகளில் பங்கேற்று 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி ரேட் ஒரு ஓவர்களுக்கு 6.43 ஆக இவரது பௌலிங்கில் இருந்தது. அத்துடன் 2013 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
2014 ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக மோகித் சர்மா விளையாடினார். இவர் பொதுவாக தொடக்க மற்றும் இறுதி ஓவர்களை வீசி வந்தார். 2014 ஐபிஎல் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பை அணியில் மோஹித் சர்மா இடம்பெற்றார். அந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் இந்திய அணியின் 3வது வேகப்பந்து வீச்சாளராக மோஹித் சர்மா களமிறங்கினார்.
30வயதான மோஹித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடி வருகிறார். 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ள இவர் தனது பழைய ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.