#3: பவான் நெகி
பவான் நெகி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய போது மிகப்பெரிய ஹிட்டராக திகழ்நதார். இவர் பேட்டிங்கில் நீண்ட தூரத்திற்கு அடிக்கும் திறனையும் , பௌலிங்கில் சுழற்பந்து வீச்சாளராகவும் திகழந்து ஆல்-ரவுண்டராக ஜொலித்தார். டெல்லி ஆல்-ரவுண்டரான இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையில் விளையாடிய போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதன் காரணமாக தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார் பவான் நெகி. 2016 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் 4வது ஸ்பின்னராக இந்திய அணியில் விளையாடினார். 2016 ஐபிஎல் தொடரில் 4 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனார். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத ஒரு வீரருக்கு ஐபிஎல் தொடரில் அளிக்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். 2017 ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை பவான் நெகி வீழ்த்தினார்.
தற்போது, முஷ்டாக் அலி கோப்பையில் 26 வயதான் பவான் நெகி விளையாடி வருகிறார். முதல் சுற்றில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் தக்க வைக்கப்பட்டுள்ளார் பவான் நெகி.