#2: ஜோஹிந்தர் சர்மா
எம்.எஸ்.தோனியின் முதல் அடையாளமாக திகழும் 2007 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஜோஹிந்தர் சர்மா கடைசி ஓவரை சிறப்பாக வீசியதன் காரணமாக இந்தியா கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் வெற்றி பெற கடைசி 6 பந்துகளுக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. மிஸ்பா-உல்-ஹக் ஸ்ட்ரைக்கில் இருந்தார்.
தோனி ஜோஹிந்தர் சர்மாவை நம்பி இறுதி ஓவரை அவரிடம் அளித்தார். இவரது பௌலிங்கில் அகலப்பந்து மற்றும் சிக்ஸர் சென்ற நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியை கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். இந்த நியாபகங்கள் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் வீரர்கள் மனதிலும் அச்சாணி போல் பதிந்திருக்கும்.
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஜொஹிந்தர் சர்மா , தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக விளையாடினார். 2011 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய இவர் 16 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 4 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி சார்பாகவும் விளையாடியுள்ளார். 2011ல் ஏற்பட்ட விபத்திற்குப் பிறகு சர்வதேச அணிக்கு இவரால் மீண்டும் திரும்ப இயலவில்லை.
தற்போது இவர் ஹரியானாவில் காவலராக பணிபுரிகிறார். கடைசியாக இவர் விளையாடிய கிரிக்கெட் போட்டி, ஸ்டே.மார்டிஜீல் நடந்த டைமன்ட் vs ராயல்ஸ் போட்டியில் பங்கேற்றது தான்.