#1: மோஹித் சர்மா
ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 37 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணமாக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார் மோஹித் சர்மா. 2013 ஐபிஎல் தொடரில் தோனியின் தலைமையிலான சென்னை அணியில் இடம்பெற்ற இவர், 15 போட்டிகளில் பங்கேற்று 30 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எகானமி ரேட் ஒரு ஓவர்களுக்கு 6.43 ஆக இவரது பௌலிங்கில் இருந்தது. அத்துடன் 2013 சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
2014 ஐபிஎல் சீசனிலும் சென்னை அணிக்காக மோகித் சர்மா விளையாடினார். இவர் பொதுவாக தொடக்க மற்றும் இறுதி ஓவர்களை வீசி வந்தார். 2014 ஐபிஎல் தொடரில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார் மோஹித் சர்மா.
ஆஸ்திரேலியாவில் நடந்த 2015 உலகக் கோப்பை அணியில் மோஹித் சர்மா இடம்பெற்றார். அந்த தொடரில் இந்திய அணி விளையாடிய 8 போட்டிகளிலும் இந்திய அணியின் 3வது வேகப்பந்து வீச்சாளராக மோஹித் சர்மா களமிறங்கினார்.
30வயதான மோஹித் சர்மா உள்ளூர் கிரிக்கெட்டில் ஹரியானா அணிக்காக விளையாடி வருகிறார். 2019 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டுள்ள இவர் தனது பழைய ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.