#3.உமேஷ் யாதவ்
2019 உலகக் கோப்பை அணிக்கு ஏற்கனவே இந்திய அணி சார்பில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் ( பூம்ரா , முகமது ஷமி , புவனேஸ்வர் குமார் ) தயராகி உள்ளனர். நான்காவது வேகப்பந்து வீச்சாளராக அனுபவம் வாய்ந்த உமேஷ் யாதவ் பார்க்கப்பட்டு வருகிறார். 2015 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
2019 ரஞ்சி சீசனின் சேம்பியன் அணியான "விதார்பா"- வில் உமேஷ் யாதவ் இடம்பெற்று இருந்தார். மூன்று போட்டிகளில் பங்கேற்ற இவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் மூன்று 5-விக்கெட்டுகள் அடங்கும். 31 வயதான உமேஷ் யாதவ் செப்டம்பர் 2018ல் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசியாக பங்கேற்றார். ரஞ்சி சீசனில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தி உள்ளார். கடந்த வருடத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் உமேஷ் யாதவ் 3 டி20 போட்டிகளில் பங்கேற்று 5 விக்கெட்டுகளையும் , 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து மண்ணில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு சரியாகவும் , சிறப்பாகவும் இருக்கும். எனவே ஆஸ்திரேலிய தொடரில் உமேஷ் யாதவிற்கும் வாய்ப்பளிக்ப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.