#2.அஜுன்க்யா ரகானே
இந்திய தொடக்க வீரர்களுக்கான பரிசோதனையில் இந்திய டெஸ்ட் துனை கேப்டன் ரகானேவும் ஒரு முக்கிய போட்டியாளராக உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரகானே ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற 2015 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த உலக கோப்பை தொடரில் ரகானே 8 போட்டிகளில் பங்கேற்று 34.66 சராசரியுடன் 208 ரன்களை அடித்தார். இத்தொடரில் அதிக பட்சமாக 78 ரன்களை ரகானே அடித்தார். 2018 சென்சுரியனில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசியாக ரகானோ விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் இவரது சீரான பேட்டிங்கால் டெஸ்ட் அணியில் விளையாடி வருகிறார்.
தற்போது ஆஸ்திரேலிய தொடரில் ரோகித் சர்மா மற்றும் தவானிற்கு ஓய்வளிக்கபோவதாக குறிப்பால் உணர்த்தியுள்ளார். எனவே ரகானேவை விரைவில் ஒருநாள் அணியின் தொடக்க ஆட்டக்காரராக காணலாம். மும்பை பேட்ஸ்மேன் ரகானே சமீபத்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய-ஏ அணியை வழிநடத்தினார். இதில் 59,91 மற்றும் 0 ஆகிய ரன்களை குவித்துள்ளார். நன்றாக தனது ஆட்டத்தை நிருபித்துள்ள ரகானேவிற்கு ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இடம்பெற வாய்ப்புள்ளது. ரகானே இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு மீண்டும் இந்திய ஓடிஐ அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.ஜாஸ்பிரிட் பூம்ரா
பூம்ரா 2018ல் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 78 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூசிலாந்து தொடர்( 5 ஓடிஐ ,3 டி20) ஆகிய இரு தொடர்களிலும் வேலைப்பளுவை குறைக்க ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய பௌலிங்கில் பூம்ரா ஒரு முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார். அத்துடன் 2019 உலக கோப்பை இந்திய அணியிலும் பூம்ரா சிறப்பாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு வெளிநாட்டு ஒரு நாள் தொடரிலும் விளையாடத பூம்ரா ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியில் இனைவார்.
கேப்டன் விராட் கோலியின் அதிரடியிலும் , பூம்ராவின் சிறப்பான பந்துவீச்சாலும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை கைப்பற்றி 2019 உலகக் கோப்பைக்கு முன் ஐசிசி ஒடிஐ தரவரிசையில் முதலிடத்தை இந்திய அணி வகிக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இத்தொடர் 2019 உலகக் கோப்பை மற்றும் 2019 ஐபிஎல்-ற்கு பூம்ரா தயராகுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆஸ்திரேலிய தொடரில் பூம்ரா பந்து வீச்சு அனல்பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.