இந்தியா மட்டுமல்லாமல் அனைத்து அணிகளிலும் சகோதரர்கள் விளையாடி அசத்தி வருகின்றனர். அதில் சிறந்த 5 சகோதரர்களைப் பற்றி இங்கு காண்போம். இந்தியாவில் யூசுப் பதான் – இர்பான் பதான் , ஹார்திக் பாண்டியா – குர்னல் பாண்டியா , பாகிஸ்தானில் கம்ரான் அக்மல் – உமர் அக்மல் , ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் வாக் – மார்க் வாக் , மைக் ஹசி – டேவிட் ஹசி , ஷான் மார்ஷ் – மிட்சில் மார்ஷ் , இங்கிலாந்தில் டாம் குர்ரான் – சாம் குர்ரான், நியூசிலாந்து அணியில் ப்ரெண்டன் மெக்கல்லம் – நாதன் மெக்கல்லம் தென் ஆப்பிரிக்காவில் அல்பி மோர்கல் – மோர்னே மோர்கல் என பல சகோதரர்கள் தங்களது நாட்டிற்காக விளையாடி வருகின்றனர். இவர்களில் பிரபலமான 5 சகோதரர்களை இங்கு காண்போம்.
#5 கம்ரான் அக்மல் – உமர் அக்மல்

பாகிஸ்தான் அணியில் மிகவும் பிரபலமான சகோதரர்கள் கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மல் ஆவர். இவர்கள் இருவரும் விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு அட்னான் அக்மல் என மற்றொரு சகோதரரும் உள்ளார். இவர்கள் மூவரும் கிரிக்கெட் வீரர்கள் ஆவர். கம்ரான் அக்மல் 2002-ல் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டார். இவருக்கும் இவரது சகோதரர் உமர் அக்மல்-கும் ஏறக்குறைய 8 வயது வித்தியாசம். பாகிஸ்தான் அணியின் பிரபல வீரர் பாபர் அஸாம் இவரது சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
#4 இர்பான் பதான் - யூசுப் பதான்

இந்தியாவில் உள்ள சகோதரர்களிலேயே அனைவராலும் அறியப்படும் சகோதரர்கள் இவர்களே. இதில் யூசுப் பதான் 24 செப்டம்பர் 2007 அன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால் இர்பான் பதான் இவருக்கு முன்னறே 2003 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் ஆல்ரவுண்டர்கள் ஆவர். இர்பான் பதான் வேகப்பந்து வீச்சாளராகவும் , யூசுப் பதான் சுழல் பந்து வீச்சாளராகவும் விளங்கினர். இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலாவது ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். யூசுப் பதான் அதிரடி ஆட்டக்காரராக விளங்கினார். இவர்கள் இருவரும் 2007 – 2010 காலகட்டத்தில் இந்திய அணிக்காக விளையாடினர்.
#3 அல்பி மோர்கல் – மோர்னே மோர்கல்

தென்னாப்ரிக்கா அணிக்காக விளையாடிய சகோதரர்கள் அல்பி மோர்கல் மற்றும் மோர்னே மோர்கல் . இவர்கள் இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தனர். இதில் அல்பி மோர்கல் சிறந்த ஆல்ரவுண்டராக விளங்கினார். அல்பி மோர்கல் தென்னாப்ரிக்க அணிக்காக 2004 - ம் ஆண்டும் , மோர்னே மோர்கல் 2006 – ம் ஆண்டும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டனர். அல்பி மோர்கல் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார். மோர்னே மோர்கல் தென்னாப்ரிக்க அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் நான்காம் இடத்தில் உள்ளார்.
#2 ப்ரெண்டன் மெக்கல்லம் – நாதன் மெக்கல்லம்

மெக்கல்லம் சகோதரர்கள் நியூசிலாந்து அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடி உள்ளனர். ப்ரெண்டன் மெக்கல்லம் விக்கெட் கீப்பராகவும் , அதிரடி ஆட்டக்காரரும் ஆவார். இவரது சகோதரரான நாதன் மெக்கல்லம் சுழல் பந்துவீச்சாளர் ஆவார். 2002 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ப்ரெண்டன் மெக்கல்லம் அறிமுகப்படுத்தப்பட்டார். பின் 5 வருடங்கள் கழித்து 2007 ஆம் ஆண்டு டி20 போட்டியில் நாதன் மெக்கல்லம் அறிமுகமானார். ப்ரெண்டன் மெக்கல்லம் தலைசிறந்த பீல்டரும் ஆவார். இவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அதிவேக சதத்தினை பதிவு செய்து ஓய்வினை அறிவித்தார்.
#1) மார்க் வாக் – ஸ்டீபன் வாக்

மார்க் வாக் மற்றும் ஸ்டீபன் வாக் இந்த வரிசையில் முதலாவது இடத்தினை பிடிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஆஸ்திரேலிய அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி உள்ளனர். ஐசிசி 1999 உலகக்கோப்பை போட்டிகளில் இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி பெற பெறும் பங்கு வகித்தனர். இரட்டை சகோதரர்களான இவர்கள் 1965 ஜுன் 2-ம் நாள் பிறந்தனர். ஸ்டீபன் வாக் 1985 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டார். பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து மார்க் வாக் அறிமுகமானார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஆஸ்திரேலிய அணிக்காக சுமார் 35,000 சர்வதேச ரன்களை குவித்துள்ளனர். ஸ்டீபன் வாக் டெஸ்ட் போட்டிகளிலும் , மார்க் வாக் ஒருநாள் போட்டிகளிலும் சிறந்து விளங்கினர்