இந்திய அணியில் இடம் கிடைப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. உள்ளூர் மற்றும் முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்திய அணியில் முதல் முறை தேர்வு செய்யப்பட்டதன் பின்னர் தான் அவர்களுக்கு பெரிய வேலையே தங்களது இடத்தை அணியில் உறுதி செய்வதற்காக அவர்கள் விளையாடவேண்டும். ஒருவேளை அவர்கள் சொதப்பினால் அவர்களின் கனவு வெறும் கனவாகவே போய் விடும்.
அப்படி இந்திய அணிக்கு தேர்வாகி தங்களது அறிமுக போட்டியில் சொதப்பியதன் மூலம் அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களை பற்றிய தொகுப்பு இது.
#) டோடா கணேஷ்
1990களில் முதல்தர போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் டோடா கணேஷ் . கர்நாடகாவை சேந்த இவர் அப்போதைய காலகட்டங்களில் இந்தியாவின் உள்நாட்டு போட்டிகள் அனைத்திலும் கலக்கி வந்தார். இதன் மூலம் இவர் கூடிய விரைவிலேயே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். 1996-97-ல் இந்திய அணி ஜிம்பாவே மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அறிமுகமான போட்டியில் ஜிம்பாவே அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி படுமோசமாக தோல்வியடைந்தது. இதுவே இவரின் சர்வதேச போட்டிகளுக்கு முடிவாக அமைந்தது.
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 168 ரன்களுக்கே அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் பின் களமிறங்கிய ஜிம்பாவே அணி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் 5 ஓவர்கள் பந்து வீசிய இவர் 20 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இருந்தாலும் அந்த போட்டில் இந்திய அணி தோல்வியடைந்ததால் பின் இவரை அணியிலிருந்து அணி நிர்வாகம் நீக்கியது. அதன் பின் இவருக்கு இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.
#) பங்கஜ் சிங்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான பங்கஜ் சிங் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியதன் மூலம் அந்த ஆண்டே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆண்டு ஜிம்பாவே நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.அதில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் இவர் அறிமுகமானார். அந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 268 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் களமிறங்கிய இலங்கை அணி எளிதில் அந்த போட்டியை வென்றது. அதில் 7 ஓவர்கள் பந்து வீசிய பங்கஜ் சிங் விக்கெட் எதுவும் எடுக்காமல் 45 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். இதனால் இவர் அந்த தொடருக்கு பின் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இருந்தாலும் 2014 ஆம் ஆண்டு சிறப்பாக விளையாடியதன் மூலம் இவரை இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி தேர்வு செய்தது. இருந்தாலும் இவருக்கு அதன் பின் ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை.