#) பர்வீஸ் ரசூல்
2012-13 சீசனில் இந்தியாவின் உள்ளூர் போட்டிகளை கலக்கிய காஷ்மீரை சேர்ந்த சூழல் பந்துவீச்சாளரான பர்வீஸ் ரசூல் 2014 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். பேட்ஸ்மேனாகளை திணறடிக்கும் அளவுக்கு பந்துவீசுவதில் இவர் கை தேர்ந்தவர்.இதன் மூலம் இவர் ஐபிஎல் தொடரின் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார். இவர் வங்கதேச அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். அந்த போட்டில் 10 ஓவர்கள் பந்து வீசிய இவர் 60 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலும் அதன் பின் நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான அணியில் இவர் தேர்வு செய்யப்படவே இல்லை.
#) பகவத் சந்திரசேகர்
இந்திய அணி களம் கண்டதில் தலை சிறந்த சுழல் பந்துவீச்சாளர்களுள் ஒருவரான பகவத் சந்திரசேகர் இந்திய அணிக்காக பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரராக விளங்கிய இவரால் ஒருநாள் போட்டில் சிறப்பாக செயல்பட முடியவில்லை. இவர் ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் தேர்வுசெய்யப்பட்டார். அதில் கடைசி ஒருநாள் போட்டில் விளையாட இவருக்கு வாய்ப்பு கிடைத்தது முதலில் களமிறங்கி நியூஸிலாந்து அணியை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தினார் பகவத் சந்திரசேகர். 7 ஓவர்கள் பந்து வீசிய இவர் வெறும் 36 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருந்தாலும் இந்த போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் இவருக்கு அதன் பின் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கவே இல்லை.