கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி விளங்குகிறார். இவருடைய ஆட்டத்திறன் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாக சிறப்பாக உள்ளது.அத்துடன் வரும் தொடர்களிலும் சிறப்பாவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி 2018ஆம் அண்டை தனது கிரிக்கெட் வாழ்வில் சிறப்பாக முடித்துள்ளார். 2018ல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. 2019 ஆம் வருடத்திலும் அதே ஆட்டத்திறனுடன் விளையாடி வருகிறார். அத்துடன் வருங்காலத்திலும் சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபடுவார் என தெரிகிறது. 2018ல் கோலி பேட்ஸ்மேனாக நிறைய சாதனைகளை படைத்தும் முறியடித்தும் உள்ளார்.
தற்போது விராட் கோலிக்கு உள்ள ஆட்டத்திறனிற்கு 2019 ஆண்டில் மிகப்பெரிய சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் இங்கு விராட் கோலியால் 2019ல் முறியடிக்கப்படவுள்ள 3 மிகப்பெரிய சாதனைகளை பற்றி காண்போம்.
#1.சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 20,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர்
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் 687 ரன்களை குவித்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 20,000 ரன்களை குவித்த கிரிக்கெட் வீரர் என்ற அற்புதமான மற்றும் மிகப்பெரிய சாதனையை படைப்பார். கடந்த காலத்தை கொண்டு ஒப்பிடும்போது , வலதுகை பேட்ஸ்மேன் விராட் கோலி உலகில் 12வது வீரராகவும் , இந்திய அணியில் 3வது வீரராகவும் 20,000 கடந்து வரலாற்று சாதனையை படைக்க உள்ளார். இவர் 20,000 சர்வதேச ரன்களை கடக்கும் போது,உலகின் முதல் பேட்ஸ்மேனாக அதிவேகமாக சர்வதேச கிரிக்கெட்டில் 20,000 ரன்களை கடந்தவர் என்ற சாதனையையும் படைக்கப் போகிறார் விராட் கோலி.
தற்போது இந்த சாதனையை இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் பிரைன் லாரா தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளனர். இருவருமே 20,000 சர்வதேச ரன்களை கடக்க மொத்தமாக 453 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினர். இன்றுவரை இவர்கள் இருவருமே அதிவேகமாக 20,000 ரன்களை குவித்தோர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
விராட் இன்னும் 47 போட்டிகளில் 687 ரன்களை கடந்தால் இந்த வரலாற்று சாதனையை முறியடிப்பார். இந்த சாதனையை விராட் கோலி முறியடித்தால் அவரது கிரிக்கெட் வாழ்வில் இது மிகப்பெரிய சாதனை முறியடிப்பாக இருக்கும். இந்திய அணி இந்த வருடத்தில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. எனவே இது விராட் கோலிக்கு சாதகமாக இருக்கும். சச்சின் டெண்டுல்கரின் இந்தச்சாதனை மட்டுமல்லாமல் வருங்காலத்தில் நிறைய சாதனைகளை விராட் கோலி படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த கால கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு இருக்கும் ரசிகர் படையைப் போல் விராட் கோலிக்கும் பெரும் ரசிகர் படை உள்ளது.
#2.குறைவான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன்.
தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 60 போட்டிகளில் வென்று 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை தோனி இன்றுவரை வைத்துள்ளார். விராட் கோலி இந்த சாதனை பந்தயத்தில் மிக அருகில் நெருங்கி விட்டார். டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றால் குறைவான போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 46 டெஸ்டில் 27 வெற்றிகளை குவித்ததால் டெஸ்ட் போட்டிகளில் இவரது வெற்றி சதவீதம் 58.69 ஆக உள்ளது. இதுவே இந்திய கேப்டன் ஒருவரது அதிகபட்ச டெஸ்ட வெற்றி சதவீதமாகும்.( குறைந்தது 5 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக )
விராட் கோலியின் சிறந்த டெஸ்ட் தொடர் என்றால் அது சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்திய டெஸ்ட் தொடர் தான். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. தற்போது இந்திய அணியின் டெஸ்ட் ஆட்டத்திறனை பார்க்கும் போது இந்த சாதனை கூடிய விரைவில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#1.இந்திய ஓடிஐ அணியின் கேப்டனாக அதிக சதங்கள்
விராட் கோலி, ஓடிஐ கேப்டனாக அதிக சதங்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வெகு விரைவில் பிடிக்க போகிறார். தற்போதுவரை ஓடிஐ கேப்டனாக 22 சதங்களை விளாசி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இனிவரும் காலங்களில் விராட் கோலி இந்த சாதனையை தன்வசம் வெகு விரைவில் மாற்றப்போகிறார்.
விராட் கோலி கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களை விளாசியுள்ளார். இன்னும் 6 சதங்களை விளாசி விராட் கோலி , ரிக்கி பாண்டிங்கின் இந்த சாதனையை 2019ல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சவால் நிறைந்த இந்த சாதனையை முறியடிப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒரு அணியின் கிரிக்கெட் வீரராக சதங்களை அடிப்பதற்கும், ஒரு அணியின் கேப்டனாக சதங்களை விளாசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விராட் கோலி இந்த சாதனையை குறைந்த ஒருநாள் போட்டிகளிலேயே முறியடிக்கவுள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த வருடத்தில் இந்திய அணி நிறைய சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அத்துடன் 2019 உலகக் கோப்பை தொடரும் இந்த வருடத்தில் நடைபெறுவதால் விராட் கோலி கூடிய விரைவில் இந்த சாதனையை முறியடிக்க மிகுந்த உதவியாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 20ற்கும் மேற்பட்ட சதங்களை விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது