#2.குறைவான டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன்.
தோனியின் கேப்டன்ஷிப்பில் இந்திய அணி 60 போட்டிகளில் வென்று 27 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை தோனி இன்றுவரை வைத்துள்ளார். விராட் கோலி இந்த சாதனை பந்தயத்தில் மிக அருகில் நெருங்கி விட்டார். டெல்லியை சேர்ந்த பேட்ஸ்மேனான விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி இன்னும் 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றால் குறைவான போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த இந்திய டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.
தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 46 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 27 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 46 டெஸ்டில் 27 வெற்றிகளை குவித்ததால் டெஸ்ட் போட்டிகளில் இவரது வெற்றி சதவீதம் 58.69 ஆக உள்ளது. இதுவே இந்திய கேப்டன் ஒருவரது அதிகபட்ச டெஸ்ட வெற்றி சதவீதமாகும்.( குறைந்தது 5 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக )
விராட் கோலியின் சிறந்த டெஸ்ட் தொடர் என்றால் அது சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா-இந்திய டெஸ்ட் தொடர் தான். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. தற்போது இந்திய அணியின் டெஸ்ட் ஆட்டத்திறனை பார்க்கும் போது இந்த சாதனை கூடிய விரைவில் முறியடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.