#1.இந்திய ஓடிஐ அணியின் கேப்டனாக அதிக சதங்கள்
விராட் கோலி, ஓடிஐ கேப்டனாக அதிக சதங்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தை வெகு விரைவில் பிடிக்க போகிறார். தற்போதுவரை ஓடிஐ கேப்டனாக 22 சதங்களை விளாசி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் இந்த சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இனிவரும் காலங்களில் விராட் கோலி இந்த சாதனையை தன்வசம் வெகு விரைவில் மாற்றப்போகிறார்.
விராட் கோலி கேப்டனாக ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களை விளாசியுள்ளார். இன்னும் 6 சதங்களை விளாசி விராட் கோலி , ரிக்கி பாண்டிங்கின் இந்த சாதனையை 2019ல் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சவால் நிறைந்த இந்த சாதனையை முறியடிப்பது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஒரு அணியின் கிரிக்கெட் வீரராக சதங்களை அடிப்பதற்கும், ஒரு அணியின் கேப்டனாக சதங்களை விளாசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. விராட் கோலி இந்த சாதனையை குறைந்த ஒருநாள் போட்டிகளிலேயே முறியடிக்கவுள்ளது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும். இந்த வருடத்தில் இந்திய அணி நிறைய சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அத்துடன் 2019 உலகக் கோப்பை தொடரும் இந்த வருடத்தில் நடைபெறுவதால் விராட் கோலி கூடிய விரைவில் இந்த சாதனையை முறியடிக்க மிகுந்த உதவியாக இருக்கும்.
இதுமட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் 20ற்கும் மேற்பட்ட சதங்களை விளாசிய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையையும் விராட் கோலி படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது