விவியன் ரிச்சர்ட்ஸ் , சச்சின் டெண்டுல்கர், ஷேன் வார்னே மற்றும் பலர் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி கிரிக்கெட் வரலாற்றில் தங்களது பெயர்களை கல்வெட்டில் பதித்துள்ளனர். ஒருசில கிரிக்கெட் வீரர்கள் ஓடிஐ / டி20 போட்டிகளை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்தியிருப்பர். இத்தகைய கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் நுணுக்கமானதாகவும், உலக கிரிக்கெட்டில் ஒரு சேம்பியன் கிரிக்கெட்டராகவும் திகழ்வர். ஆனால் இவர்கள் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருக்க மாட்டார்கள்.
சில சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் உலககோப்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்காது. அத்தகைய 5 வீரர்களை பற்றி நாம் இங்கு காண்போம்.
#5.மேதிவ் ஹோக்கார்ட் (இங்கிலாந்து)
இவர் 2000ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி எட்டு வருடங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாடினார். இவர் இந்த எட்டு வருடத்தில் 67 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 30.5 சராசரியுடன் 248 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி ரேட் ஒரு ஓவர்களுக்கு 3.26 ஆகும். மேதிவ் ஹக்கார்ட ஒரு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஆவார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. 26 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 36 சராசரியுடன் 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவர் அதிக உயரமுடனும் , பந்தை அதிக வேகத்தில் வீசும் திறனுடன் திகழ்ந்தார். இதன் மூலம் பேட்ஸ்மேனுக்கு இரு திசைகளிலும் ஸ்விங் செய்து சரியான முறையில் பந்தை வீசுவார். இவர் 2003 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். ஆனால் ஒரு போட்டிகளில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
#4.கிறிஸ் மார்ட்டின் (நியூசிலாந்து)
வலதுகை வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் மார்டின் நியூசிலாந்து அணியில் 2000ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 13 வருடங்கள் விளையாடினார். 71 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 33.81 சராசரியுடன் 233 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது எகானமி ரேட் ஒரு ஒவருக்கு 3.37 ஆகும்.கிறிஸ் மார்டின் ஒருநாள் அணியில் இடம்பெறுவது அபூர்வமாக இருந்ததால், உலக போட்டியில் கடைசி வரை விளையாடமலேயே ஓய்வு பெற்றார்.
20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 44.66 சராசரியுடன் 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டார்ல் டஃபேவிற்கு பதிலாக ஒருநாள் அணியில் களமிறக்கப்பட்டார். ஆனால் ஒரு உலககோப்பை தொடரில் கூட பங்கேற்காமலேயே ஓய்வு பெற்றார்.
#3.ஜஸ்டின் லாங்கர்(ஆஸ்திரேலியா)
ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த தொடக்க வீரர் ஆவார். மேதிவ் ஹைடன் மற்றும் ஜஸ்டின் லாங்கர் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக 113 டெஸ்ட் இன்னிங்ஸில் களமிறங்கி 51.88 சராசரியுடன் 5655 ரன்களை குவித்துள்ளனர். இவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் நுணுக்கமான முறையில் பேட்டிங் செய்யும் திறமை உடையவர். இவர் 105 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 45.27 சராசரியுடன் 7696 ரன்களை குவித்துள்ளார்.
ஆனால் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. இவர் மொத்தமாக 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளதால் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை.
#2.வி.வி.எஸ்.லக்க்ஷமன்(இந்தியா)
சச்சின் டெண்டுல்கர் , சவ்ரவ் கங்குலி , ராகுல் டிராவிட் விளையாடிய காலங்களில் வி.வி.எஸ்.லக்சுமன் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் முகமது அஷாருதினை போல நுணுக்கமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சரியாக கணித்தும் விளையாடக் கூடியவர்.
1996ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இந்திய அணிக்காக 16 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். லக்க்ஷமன் 134 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 45.97 சராசரியுடன் 8781 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒரு நேர்த்தியான சாதரணமான ஹைதராபாத் கிரிக்கெட் வீரர் ஆவார். 88 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் 30.76 சராசரியுடன் 2338 ரன்களை அடித்துள்ளார். விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் சில அதிரடி வீரர்கள் இந்திய அணியில் இருந்தமையால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை உலககோப்பை அணியில் இவரால் இடம்பெறமுடியாமலேயே போனது.
#1.ஆலிஸ்டர் குக்(இங்கிலாந்து)
2006ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 12 வருடங்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.161 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 45.35 சராசரியுடன் 12472 ரன்களை குவித்துள்ளார். எத்தகைய மைதானமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஆலிஸ்டர் குக்.
92 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 36.40 சராசரியுடன் 3204 ரன்களை குவித்துள்ளார். ஆலிஸ்டர் குக் களமிறங்கினால் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்த நீண்ட நேரம் ஆகும் எனற காரணத்தாலேயே உலககோப்பை அணியில் இவருக்கு கடைசி வரை விளையாடும் வாய்ப்பு கிடைக்காமலே போனது.