#2.வி.வி.எஸ்.லக்க்ஷமன்(இந்தியா)
சச்சின் டெண்டுல்கர் , சவ்ரவ் கங்குலி , ராகுல் டிராவிட் விளையாடிய காலங்களில் வி.வி.எஸ்.லக்சுமன் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆவார். இவர் முகமது அஷாருதினை போல நுணுக்கமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சரியாக கணித்தும் விளையாடக் கூடியவர்.
1996ஆம் ஆண்டு அறிமுகமான இவர் இந்திய அணிக்காக 16 வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். லக்க்ஷமன் 134 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 45.97 சராசரியுடன் 8781 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒரு நேர்த்தியான சாதரணமான ஹைதராபாத் கிரிக்கெட் வீரர் ஆவார். 88 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் 30.76 சராசரியுடன் 2338 ரன்களை அடித்துள்ளார். விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் மற்றும் சில அதிரடி வீரர்கள் இந்திய அணியில் இருந்தமையால் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை உலககோப்பை அணியில் இவரால் இடம்பெறமுடியாமலேயே போனது.
#1.ஆலிஸ்டர் குக்(இங்கிலாந்து)
2006ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் 12 வருடங்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.161 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 45.35 சராசரியுடன் 12472 ரன்களை குவித்துள்ளார். எத்தகைய மைதானமாக இருந்தாலும் சிறப்பாக விளையாடக் கூடியவர் ஆலிஸ்டர் குக்.
92 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 36.40 சராசரியுடன் 3204 ரன்களை குவித்துள்ளார். ஆலிஸ்டர் குக் களமிறங்கினால் சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்த நீண்ட நேரம் ஆகும் எனற காரணத்தாலேயே உலககோப்பை அணியில் இவருக்கு கடைசி வரை விளையாடும் வாய்ப்பு கிடைக்காமலே போனது.