உலகில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் ஒரு ஆடுகளத்தில் மட்டும் கிரிக்கெட் வீரர்கள் டெஸட் போட்டிகளில் விளையாட விரும்புவர். அந்த மைதானம் உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் அடையாளமாக திகழும் லார்ட்ஸ் கிரிக்கெட் ஆடுகளமாகும். கிரிக்கெட் விளையாட்டின் இருப்பிடம் என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானம் உருவாகி அதிக ஆண்டுகளுக்கும் மேல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்த லார்ட்ஸ் ஆடுகளத்தை வடிவமைத்த தாமஸ் லார்ட்ஸின் பெயரையே இம்மைதானத்திற்கு சூட்டியுள்ளனர். தாமஸ் லார்ட்ஸ் மற்றும் அவரது குழுவினர் இனைந்து 3 மைதானங்களை வடிவமைத்துள்ளனர். இவர்கள் மூன்றாவதாக வடிவமைத்த மைதானம் 1814ல் திறக்கப்பட்டு சர்வதேச போட்டிகள் நடத்தப்பட்டன.
லார்ட்ஸ் மைதானத்தில் பல்வேறு காரணிகள் ஒரு நூற்றாண்டிற்கும் மேல் வலம் வந்து ஸ்பெஷலான இடமாக விளங்குகிறது. பெரிய அறை மற்றும் சாய்வான பிட்ச் போன்ற இரு காரணிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க மேன்மேலும் உயர்ந்த இடத்தில் நிறுத்தி கிரிக்கெட் வரலாற்றில் புகழ்பெற்றதாக திகழ்கிறது.
கவுரவப் பலகை மற்றும் ஊடக மையம் போன்றன இம்மைதானத்தின் தனிச்சிறப்பாகும். தற்போது பல மைதானங்களில் இந்த சிறப்புமிக்க செயல் நடைமுறையில் உள்ளது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுவதை பெருமையாக நினைக்கின்றனர். மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்திலேயே அறிமுகமாகியுள்ளனர். கடைசியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் இம்மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
நாம் இங்கு லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான 5 கிரிக்கெட் ஜாம்பவான்களைப் பற்றி காண்போம்.
#5 கெவின் பீட்டர்சன்
2005 ஆஸஸ் தொடரில் கெவின் பீட்டர்சன் தேர்வு சற்று கேள்விக் குறியாக இருந்தது. இதற்கு காரணம் அவரது அணுகுமுறை இங்கிலாந்து ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. ஆனால் மைக்கேல் வாகன் அவரை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஸஸ் தொடரின் முதல் போட்டியில் அறிமுகம் செய்தார்.
பீட்டர்சன் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அறிமுகமானதை பலர் நகைத்து வந்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் இங்கிலாந்து 21/5 என இருந்த சமயத்தில் மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கினார். இரு இன்னிங்ஸிலும் டாப் ரன் ஸ்கோரராக கெவின் பீட்டர்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இங்கிலாந்து 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இருப்பினும் இங்கிலாந்து அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழ கெவின் பீட்டர்சன் உதவி புரிந்து அந்த தொடரின் அதிக ரன் குவித்தராக வலம் வந்தார். 5வது டெஸ்ட் போட்டியில் கெவின் பீட்டர்சனின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 158 ரன்களை குவித்தார். அக்காலத்தில் கொடி கட்டி பறந்த சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு பீட்டர்சன் விளையாடினார்.
கெவின் பீட்டர்சன் இதே ஆட்டத்தை மீண்டுமொருமுறை 2012ல் மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெளிபடுத்தி 28 வருடங்களுக்கு பின்னர் இங்கிலாந்தை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றச் செய்தார்.
பல விவாதத்தினால் கெவின் பீட்டர்சனின் கிரிக்கெட் வாழ்க்கை குறுகிய காலத்தில் முடிந்தது. ஆனால் தற்போது வரை இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார்.