#4 சவ்ரவ் கங்குலி
1996ல் இந்தியா இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்தபோது மிகவும் மோசமான நிலையில் விளையாடிக்கொண்டிருந்தது. அணியின் முழு நம்பிக்கையையும் 23 வயதான சச்சின் டெண்டுல்கர் தன் தோல் மீது ஏற்று விளையாடினார். சச்சின் டெண்டுல்கரின் சதத்தை தவிர, முதல் போட்டியில் இந்திய அணிக்கு மிக மோசமான போட்டியாக அமைந்தது. எனவே இந்த விதியை மாற்ற தேர்வுக்குழு சவ்ரவ் கங்குலியை லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்தனர்.
நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்கி தடுத்து நிறுத்தி ஆஃப் திசையில் சிறப்பான பேட்டிங்கை கங்குலி வெளிபடுத்தினார். மேலும் நின்ற இடத்தில் இருந்தும், ஒரு படி இறங்கி வந்தும் பவுண்டரிகளை விளாசுவதில் வல்லவர். ஆச்சரியமாக இங்கிலாந்து பௌலர்களும் தங்களது லைன் மற்றும் லென்தில் சரியாக கங்குலிக்கு பந்துவீச தவித்தனர்.
இடது கை பேட்ஸ்மேனான இவர் 20 பவுண்டரிகளுடன் 131 ரன்களை விளாசி லார்ட்ஸ் கவுரவ பலகையில் இடம்பிடித்தார்.
கங்குலி பௌலிங்கிலும் அசத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்த போட்டியிலும் இதே ஆட்டத்திறனை தொடர்ந்து 136 ரன்களை கங்குலி அடித்தார்.
கங்குலி இந்திய கேப்டனாக சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். 1999ல் இந்திய கிரிக்கெட் அணி சூதாட்டப் புகாரில் சிக்கியிருந்த போது மீண்டெடுத்த பெரும் பங்கு கங்குலிக்கு உண்டு. இவரது கேப்டன்ஷீப் மூலம் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்தது.
#3 ஜேம்ஸ் ஆன்டர்சன்
கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் ஜேம்ஸ் ஆன்டர்சன் புகழ்பெற்ற பழைமை வாய்ந்த லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார்.
2003ல் ஜீம்பாப்வே-ற்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் லார்ட்ஸ் மைதானத்தின் மீது கொண்ட அளவு கடந்த அன்பினால் ஆன்டர்சனின் 300வது மற்றும் 500 சர்வதேச விக்கெட்டுகளை இம்மைதானத்தில் வீழ்த்தினார்.
இவரது வேகம் மற்றும் சரியான லென்த் பௌலிங் பேட்ஸ்மேன்களை கலங்கடிக்கச் செய்தது. லான்செட்ஷைர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் மேகமூட்டமான நேரங்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார். லார்ட்ஸ் மைதானத்தில் இவரது பௌலிங் சிறப்பாக இருந்து, சில சமயங்களில் பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்ள முடியாத வகையில் இருந்துள்ளது.
லார்ட்ஸ் மைதானத்தில் 103 விக்கெட்டுகளை ஜேம்ஸ் ஆன்டர்சன் வீழ்த்தியுள்ளார். இதுவே ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஒரு மைதானத்தில் வீழ்த்திய அதிகபட்ச விக்கெட்டுகளாகும். இதனை காணும் போதே லார்ட்ஸ் மைதானத்தில் ஆன்டர்சனின் ஆதிக்கம் எவ்வாறு இருக்கும் என நமக்கு தெரிகிறது. ஸ்டுவர் பிராட் மற்றும் ஜேம்ஸ் ஆன்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான வேகப்பந்து வீச்சு இரட்டையர்களாக திகழ்கின்றனர்.