#2 ஸ்டிவன் ஸ்மித்
தற்போதைய தலைமுறையின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக உலகில் வலம் வரும் ஆஸ்திரேலிய நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டிவன் ஸ்மித் ஒரு லெக் ஸ்பின்னராக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஸ்டிவன் ஸ்மித் பாகிஸ்தானிற்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பாதுகாப்பின்மை காரணமாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெற வேண்டிய போட்டியை லார்ட்ஸீல் நடத்தியது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
ஷேன் வார்னேவிற்கு மாற்று வீரராக ஸ்டிவன் ஸ்மித் களமிறக்கப்பட்டார். ஸ்மித் தனது அறிமுக போட்டியின் முதல் இன்னிங்சில் பௌலிங் செய்யவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டிவன் ஸ்மித் மற்றும் மார்கஸ் நார்த் இனைந்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஸ்மித் தனது இடத்தை அணியில் தக்கவைத்துக்கொள்ளவில்லை. 5 டெஸ்ட் போட்டிகளுக்குப் பின்னர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார். அதன்பின் 2013ல் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு மீண்டும் திரும்பி ஒவ்வொரு தொடரிலும் சில முக்கியமான பங்களிப்பை ஸ்டிவன் ஸ்மித் அளித்து வந்தார்.
2014-15ல் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளிலும் சதம் விளாசி தனது அருமையை அணிக்கு தெரியப்படுத்தினார். மேலும் 2015ல் ஆஸ்திரேலியா 5வது முறையாக உலகக்கோப்பையை வெல்வதற்கு முண்ணனி காரணமாக ஸ்டிவன் ஸ்மித்தின் ஆட்டத்திறன் இருந்தது.
ஸ்டிவன் ஸ்மித் உலகெங்கும் நடந்த அனைத்து டெஸ்ட் தொடரிலும் அபார ரன் குவிப்பில் ஈடுபட்டுவந்தார். 2018ல் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஸ்டிவன் ஸ்மித்தின் டெஸ்ட் பேட்டிங் திறன் குறைந்து விடுமோ என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருந்துது. ஆனால் 2019ல் எட்ஜ் பாஸ்டனில் நடந்த ஆஸஸ் தொடரின் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.