லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கண்ட 5 ஜாம்பவான்கள்

Rahul Dravid and Sourav Ganguly made their debut at Lord's in 1996
Rahul Dravid and Sourav Ganguly made their debut at Lord's in 1996

#1 ராகுல் டிராவிட்

Dravid's technique was perfect for Tests
Dravid's technique was perfect for Tests

ஆல்-டைம் பெஸ்ட் டெஸ்ட் பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ராகுல் டிராவிட். இவர் 1996ல் சவ்ரவ் கங்குலியுடன் லார்ட்ஸ் மைதானத்தில் அறிமுகமானார். உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சீரான ரன் குவிப்பினால் ராகுல் டிராவிட் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்து சாதித்து காட்டினார். இதனை எடுத்துரைக்கும் வகையில் தனது ஆரம்ப டெஸ்ட் இன்னிங்ஸில் விக்கெட் சரிந்து கொண்டிருந்த சமயத்தில் சிறப்பான பேட்டிங்கை ராகுல் டிராவிட் வெளிபடுத்தினார். இதனையே அவர் தனது முழு டெஸ்ட் கிரிக்கெட் வாழ்விலும் செய்தார்.

அனைத்து பந்துகளையும் பேட் கொண்டு சரியாக எதிர்கொண்ட ராகுல் டிராவிட்டை, ஒரு சிறந்த டெக்னிக் சர்வதேச பேட்ஸ்மேனாக உலகம் இவரை பார்த்தது. ஒவ்வொரு செங்கலாக எடுத்து கட்டிடத்தை கட்டுவது போல ராகுல் டிராவிட் தடுத்து விளையாடி படிப்படியாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார். இந்த அற்புதமான செயல் மூலமே ராகுல் டிராவிட் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.

ராகுல் டிராவிட் தனது அறிமுக டெஸ்டில் கடைநிலையில் நிலைத்து விளையாடி 93 ரன்களை விளாசி கடைசி 4 விக்கெட்டுகளுக்கு 133 ரன்களை அணியில் சேர்த்தார்.

டிராவிட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல அற்புதமான பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளார். 2001ல் கொல்கத்தாவில் ராகுல் டிராவிட்டின் 180* மற்றும் 2003ல் அடிலெய்டில் 233 ஆகியன இந்திய அணி வரலாற்று டெஸ்ட் வெற்றியை படைக்க காரணமாக இருந்தது.

டிராவிட் லார்ட்ஸ் கவுரவப் பலகையில் மட்டும் இடம்பெறவில்லை, அனைத்து வகையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்று புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார்.

Quick Links