சஞ்சய் மஜ்ரேகர் டிவிட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட தருணங்கள்..!

Sanjay Manjerekar
Sanjay Manjerekar

முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மன்ஜ்ரேகரின் கருத்துக்கள் மற்ற வர்ணனையாளர்களைப் போல் இல்லை. இதனால் இவர் அதிகம் நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் வர்ணணையாளராக உருவெடுத்து தற்போது சலசலப்பை உண்டாக்கும் கருத்துக்களை வெளிபடையாக கூறி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களினாலும் நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார். அத்துடன் சமூக வலைதளத்திலும் பல சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து கடும் வெறுப்பை ரசிகர்களிடமிருந்து பெறுகிறார்‌.

கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியான விளையாட்டு வீரர்களை சீண்டி வருகிறார். குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு எதிராக பல சர்ச்சைக்குரிய கருத்தை வீசி வருகிறார். இவர் சமீபத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். நாம் இங்கு கிரிக்கெட் விளையாட்டு மட்டுமன்றி மற்ற விளையாட்டு வீரர்களையும் வம்புக்கு இழுத்து வாக்கிக் கட்டிக் கொண்ட சஞ்சய் மஜ்ரேகரின் 5 டிவிட்டர் பதிவுகளைப் பற்றி காண்போம்.

#5 கீரன் பொல்லார்ட்

2017 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டிவிட்டரில் சஞ்சய் மன்ஜ்ரேகரால் கீரன் பொல்லார்ட் சீண்டப்பட்டுள்ளார். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதிய இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றது. ஆனால் இப்போட்டியில் சஞ்சய் மஜ்ரேகரின் கருத்தினால் கீரன் பொல்லார்ட் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளானார். இப்போட்டியில் கீரன் பொல்லார்ட் பல பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்களை மட்டுமே குவித்தார். கரேபியன் ஆல்-ரவுண்டர் முன் வரிசையில் விளையாட தகுதியில்லாதவர்! இதற்கு கீரன் பொல்லார்ட் கடுமையாக டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

"சஞ்சய் மன்ஜ்ரேகர், உங்கள் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் என எதுவுமே வராது. ஏனேனில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பதற்காகவே நீங்கள் பணம் வாங்குகிறீர்கள். உங்களது கேவலமான விமர்சனத்தை தொடருங்கள்..."

#4 மைக்கேல் வாகன்

இங்கிலாந்து அணித்தேர்வு குறித்து சஞ்சய் மன்ஜ்ரேகர் விமர்சனம் தெரிவித்ததற்காக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகனிடம் கடுமையாக வசைபாடப்பட்டார். இவ்வருட தொடக்கத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாம் கர்ரானின் பேட்டிங் வரிசையைப் பற்றி கேள்வி எழுப்பிய காரணத்திற்காக மஜ்ரேகர், மைக்கேல் வாகனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

மைக்கல் வாகன் இந்தியாவுடனான இங்கிலாந்து அணியின் சிறப்பான டெஸ்ட் வெற்றியை நினைவு கூர்ந்து பதிலடி அடித்தார்.

சஞ்சய்.... நீங்கள் இந்திய அணியுடான தொடரை இங்கிலாந்து 4-1 என்று சொந்த மண்ணிலும், இலங்கைக்கு எதிராக 3-0 என அந்நிய மண்ணிலும் கடந்த வருடத்தில் வென்றதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் என நான் நினைக்கிறேன்.

#3 சவ்ரவ் கங்குலி

முன்னாள் இந்திய கேப்டன் சவ்ரவ் கங்குலியிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் சஞ்சய் மன்ஜ்ரேகர். கங்குலி தெளிவாக சஞ்சய் மன்ஜ்ரேகர் பெயரை தனது டிவிட்டரில் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையில் அவர் பதிவிட்ட அந்த கருத்து முழுவதும் அவரை குறிப்பிடும் வகையிலே இருந்தது. மன்ஜ்ரேகர் டிவிட்டரில் கங்குலியை சீண்ட ஆரம்பித்தார். கங்குலி வர்ணனை செய்யும் போது மற்ற வர்ணனையாளர்களை பேச விட மாட்டார் என மஜ்ரேகர், கங்குலியைப் பற்றி வெளியிட்டுள்ள இந்த பதிவில் குளிப்பிட்டிருந்தார்.

"சவ்ரவ் கங்குலி வர்ணணை குழுவில் இருந்ததால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவர் இருக்கும் போது நீங்கள் மிகவும் சிறப்பான ஓய்வை எடுக்கலாம். ஆரம்பத்தில் மட்டமல்லாது முழுவதுமே நீங்கள் முழு ஓய்வை எடுக்கலாம்"

சஞ்சய் மன்ஜ்ரேகரின் இந்த வெளிபடையான கருத்தை கண்டு அவரது உண்மை முகத்தை அடையாளம் கண்டார் சவ்ரவ் கங்குலி. 2003 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்ற கேப்டன் கங்குலி மன்ஜ்ரேகரை மறைமுகமாக தாக்கினார். மஜ்ரேகரின் பேட்டிங் போன்றே அவரது டிவிட்டர் பதிவுகளும் சம்மந்தம் இல்லாதவாறு இருக்கும் என மறைமுகமாக பதிவிட்டார்.

"இவரது டிவிட்டர் கருத்துக்களும் சம்மந்தமில்ல பேட்டிங் போன்றே இருக்கும். அத்துடன் அவர்களது மோசமான யோசனைகள். தற்போதுதான் எவ்வாறு இருக்க வேண்டும் என முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது தவறான எண்ணம் மாறவில்லை.

#2 சானியா மிர்சா

இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா-வாலும் கடும் நகைப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் சஞ்சய் மன்ஜ்ரேகர். எப்பொழுதும் போலவே தவறான விமர்சனத்தை இவர் சானியா மிர்சா பற்றி கூறியுள்ளார். உலக டென்னிஸ் அசோசியேஷன் வெளியிட்ட தரவரிசையில் தொடர்ந்து 80 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்ததற்காக அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் சானியா மிர்சா பதிவு செய்தபோது இந்த சண்டை வெடித்தது. அனைவரையும் போலவே மன்ஜ்ரேகரும் சானியா மிர்சாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் இவர் இரட்டையர்கள் பிரிவில் தான் முதல் இடத்தில் இருந்தார் என்பதை சேர்த்தும் குறிப்பிட்டிருந்தார் மன்ஜ்ரேகர்.

சானியா மிர்சா உடனே இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில்,

"நான் ஒற்றையர்கள் பிரிவில் விளையாடுவதில்லை. இந்த பொது அறிவு கூட உங்களுக்கு இல்லாமல் உள்ளீர்கள். அனைவருக்கும் அறிவு இருக்கும் என்பதைப் பற்றி நினைத்தது என் தவறுதான்"

#1 ரவீந்திர ஜடேஜா

மன்ஜ்ரேகர் சமீபத்தில் வெளியிட்ட தவறான கருத்து இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவைப் பற்றியது தான்‌. ஒரு இக்கட்டான நிலையில் மன்ஜ்ரேகர், ஜடேஜாவின் மனநிலையை பாதிக்கும் வகையில் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்போது வர்ணனையாளராக மாறியுள்ள மன்ஜ்ரேகர், கடும் சர்ச்சைக்குரிய வகையில் "ஜடேஜா 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய ஆடும் XIல் இடம்பெற்றால் ஒரு துணுக்கு வீரராகத்தான் செயல்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் மஜ்ரேகர் கூறியதாவது,

"துணுக்கு வீரர்களை நான் என்றும் ஆதரிப்பதில்லை. இதுபோன்றுதான் ஜடேஜா இந்திய ஒருநாள் அணியில் உள்ளார். இந்திய டெஸ்ட் அணியில் இவர் ஒரு சுத்தமான பௌலர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜடேஜாவை ஒரு பேட்ஸ்மேனாகவோ, சுழற்பந்து வீச்சாளராக நான் எப்போதுமே பார்த்ததில்லை.

இந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு ரவீந்திர ஜடேஜா பதிலளிக்க அதிக காலம் தாழ்த்தவில்லை.

"நீங்கள் விளையாடிய கிரிக்கெட்டை விட நான் இரு மடங்கு விளையாடிவிட்டேன். தற்போது வரை விளையாடி வருகிறேன். சாதனையாளர்களுக்கு எவ்வாறு மரியாதையளிக்க வேண்டும் என்பதை முதலில் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடமிருந்து அதிகபடியான தவறான கருத்துக்களை நான் கேட்டுவிட்டேன்."

Quick Links

App download animated image Get the free App now