தங்களது நாட்டுக்காக விளையாடவேண்டும் என்பது விளையாட்டு வீரர்கள் அனைவரின் கனவு. ஆனால் அது எல்லோருக்கும் நிறைவேறுவதில்லை. தன் நாட்டு அணிக்காக தேர்வு செய்யப்பட்டு களத்தில் இறங்கி முதன் முதலாக விளையாடும் போது கிடைக்கும் சந்தோசம் வேறு எதிலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதுவரை இந்திய அணிக்காக 227 வீரர்கள் விளையாடியுள்ளனர். இந்த பட்டியலில் சமீபத்தில் தீபக் சகார் இணைந்துள்ளார். இப்படிப்பட்ட வேளையில் உள்ளூர் மற்றும் முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களே இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படுவர். அதில் குறைந்த வயதிலேயே இந்திய அணிக்காக அறிமுகமான டாப் 5 வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
#5) லக்ஷ்மி ரத்தன் ஷுக்லா ( 17 வயது 320 நாட்கள் )
லக்ஷ்மி ரத்தன் ஷுக்லா தனது 17 வயது 320 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆல்ரவுண்டரான இவர் 1999 ஆம் ஆண்டு நாக்பூரில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு தனது முதல் போட்டி சிறப்பானதாக அமையவில்லை. அந்த போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசிய இவர் விக்கெட் எதுவும் எடுக்காமல் 32 ரன்களை வாரிவழங்கினார். அதுமட்டுமல்லாமல் அந்த போட்டியில் இவருக்கு களமிறங்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. பெங்கால் மாநிலத்தை சேர்ந்த இவரால் அதன் பின் அணியில் நிலைத்து இடம்பிடிக்க முடியவில்லை. இதுவரை தனது கிரிக்கெட் கேரியரிலேயே 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவர் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளிலும் இவரால் ஜொலிக்க முடியவில்லை. இருந்தாலும் இவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
#4) பார்த்தீவ் படேல்
இவரை பற்றி நம்மில் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஐபிஎல் போட்டிகளில் கூட அதிக அணிகளுக்காக விளையாடிய வீரரும் இவரே. இவர் தனது 17 வயது 301 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்போதய காலகட்டங்களில் இந்திய அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தவித்ததால் இவருக்கு அந்த வாய்ப்பு விரைவில் கிடைத்தது. 2003 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இவர் அறிமுகம் செய்யப்பட்டார். அறிமுகமான முதலாவது போட்டியிலேயே இந்திய அணி படுமோசமாக விளையாடியது. 122 ரன்களுக்கே அணைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இதில் பார்த்தீவ் படேல் 13 ரன்கள் குவித்திருந்தார். அதன் பின் இந்திய அணியில் தோணி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் வருகை இவருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இன்றளவும் தனது ஓய்வினை அறிவிக்காத இவர் தனக்கான வாய்ப்பிற்க்காக காத்திருக்கிறார்.
#3) ஹர்பஜன் சிங் ( 17 வயது 288 நாட்கள் )
அப்போதைய காலகட்டங்களில் அணில் கும்ப்ளே உடன் இணைந்து ஹர்பஜன் சின்-ன் பந்துவீச்சு எதிரணிகளை கலங்கடித்தது. இவர் 1998 ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூலம் அறிமுகமானார். அதே ஆண்டில் இவருக்கு டெஸ்ட் அணியிலும் இடம் கிடைத்தது. இவரின் சுழல் பந்து வீச்சு இந்தியாவிற்கு பெரிய பலமாய் அமைந்தது. டெஸ்ட் போட்டிகளில் இவர் வீழ்த்திய ஹாட்ரிக் இன்றளவும் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாதது. இவர் டெஸ்ட் போட்டிகளில் 403 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் இரண்டுமுறை சதம் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் கூட இவர் சிறந்து விளங்கியுள்ளார் அதில் 134 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள இவர் மூன்று முறை கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளார்.