#2) மனீந்தர் சிங் ( 17 வயது 222 நாட்கள் )
இவர் அணியில் அறிமுகமாகும் போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஏனென்றால் அப்போதைய பிக்ஷன் சிங் பேடிக்கு மாற்றாக இவர் தேர்வு செய்யப்பட்டதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. 1983-ல் அறிமுகமான போட்டியிலேயே இவரால் விக்கெட் எதுவும் வீழ்த்த முடியவில்லை. இதனால் நாள்போக்கில் இவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் 1993 ஆம் ஆண்டு கம்பேக் கொடுத்தார். இருந்தாலும் பெரிதாக சொல்லும் அளவுக்கு எந்த சாதனையும் படைக்காத இவர் ஒரு நடுத்தர வீரராகவே ஓய்வுபெற்றார். 35 டெஸ்ட் மற்றும் 59 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் முறையே 88 மற்றும் 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#1) சச்சின் டெண்டுல்கர் ( 16 வயது 238 நாட்கள் )
இவரை பற்றி தெரியாத ரசிகரே இருக்க முடியாது. கிரிக்கெட் என்று சொன்னவுடனே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது இவரின் பெயர் தான். அந்த அளவுக்கு கிரிக்கெட்டில் மிகப்பெரிய இடத்தினை பிடித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவர் 1989 ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற பாக்கிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போது இவருக்கு வயது வெறும் 16. அந்த போட்டியில் இவர் வெறும் 15 ரன்கள் தான் குவித்தார். இருந்தாலும் அதன் பின்னர் இவர் படைத்த சாதனைகள் இவருக்கென வரலாற்றில் தனி இடத்தினை பிடிக்க காரணமாகிவிட்டது. தற்போது வரை கிரிக்கெட் உலகில் படைக்கப்பட்ட பெரும்பாலான சாதனைகள் இவரால் படைக்கப்பட்டதே.