உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் மதிக்கக்கூடிய இந்திய ஜாம்பவானான தோனி தனது முந்தைய காலங்களில் எந்தவொரு அணிக்கு எதிராக விளையாடினாளும் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியைத் தன் வசப்படுத்தும் வல்லமை கொண்டவர். இவர் பேட்டிங் மட்டுமில்லாமல் கேப்டன்ஷிப்பிலும் அசத்தினார்.இந்திய அணி டி20, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இவரது தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது.
இவரது தலைமையில் விராட் கோஹ்லி, அஷ்வின், ஜடேஜா போன்றோர் பெரிய வீரர்களாக உருவெடுத்தனர். 14 வருடங்களாக விளையாடி வரும் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஒய்வு பெற்றார், ஒருநாள் போட்டியிலும் கேப்டன் பதிவியிலிருந்து விலகினார். இவற்றில் நாம் தோனியிடம் இழந்த 6 விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
#1 நீளமான முடி
இவரது முந்தைய காலங்களில் அதிரடி வீரர் எனப் பெயர் பெற்றிருந்தாலும் இவரது நீள முடியினால் மிக விரைவில் பிரபலமானார். அம்முடியை முதலில் தங்க நிறத்தில் சாயமிட்டிருந்தார், பின்பு கருப்பு நிறத்திற்கு மாற்றிக்கொண்டர். பாகிஸ்தானின் அப்போதைய ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் தோனியின் 'ஹேர் ஸ்டைலை' பாராட்டியும், ஸ்டைலை மாற்றாமலும் வைக்கக் கேட்டுக் கொண்டார்.
#2 முன்வரிசையில் தோனி
இந்திய அணிக்கு இப்பொழுது நல்ல ரன்ரேட்டில் முன்வரிசை வீரர்கள் பலம் சேர்த்தாலும் இவர் விளையாடிய முந்தைய காலங்களில் இந்திய அணி 250-300 ரன்களே பெரும்பாலும் குவித்துக்கொண்டிருந்து, அதன் காரணமே அதிரடி வீரர்கள் முன்னனி வீரர்களாகக் களம் கண்டனர்.
தோனி முன்னனி வீரராக விளையாடிய போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்களும், இலங்கைக்கு எதிராக 183* ரன்களும் விளாசினார். எனினும் தற்போதைய போட்டிகளில் இவரது ஆட்டத்தில் சற்று தொய்வு எற்பட்டுள்ளது, ரன்களின் வேகமும் குறைந்துள்ளது.
#3 ஆச்சரியமான யுக்திகள்
தற்பொழுது பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் கடைசி கட்ட ஒவர்களை கையாளும் 'ஸ்பெஷலிஸ்ட்'களாக இருந்தாலும் அப்போது தோனி பல முறை கடைசி ஒவர்களை கையாண்ட அனுபவம் இல்லாதவர்களைப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அதில் 2007 உலகக்கோப்பையில் ஹர்பஜன் சிங்ற்க்கு ஒரு ஒவர் மீதம் உள்ள நிலையிலும் கடைசி ஒவரில் ஜோகின்தர் ஷர்மாவை பயன்படுத்தியும், 2013 சாம்பியன்ஸ் டிராபியில் 17 ஆவது ஒவரை முந்தைய ஒவர்களில் சொதப்பிய இஷாத் ஷர்மாவை பயன்படுத்தியும் ஆச்சரியமளித்தார்.
#4 ஹெலிகாப்டர் ஷாட்
ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுக படுத்தியவர் தோனியே. இது வழக்கமான ஷாட் போல் இல்லை, இதற்குச் சரியான நேரம் மற்றும் மூர்க்கத்தனமான சக்தியும் கொண்டு செயல்படுத்துவதனால் வெற்றிக் கொண்ட தோனி நல்ல முடிவுகளைப் பெற்றார். இருப்பினும் சமீப காலங்களில் இவரிடம் இவற்றைக் காணமுடிவதில்லை.
5 அரங்கம் முழுவதும் பைக் சவாரி
அப்போதைய காலங்களில் 'மேன் ஆஃப் தி மேட்ச்' மற்றும் 'மேன் ஆஃப் தி சிரியஸ்' போன்ற பரிசுகளுக்குக் கார் மற்றும் பைக்குகளே பெறும்பாலும் பரிசுகளாக அறிவித்தனர். இவற்றை யார் வென்றாலும் தோனி பைக்குகளில் சவாரி செய்தது இன்றளவிலும் ரசிகர்களிடையே மறக்கமுடியாத தருணமாகும்.
எனினும், கேப்டன் பதவியேற்றதிலிருந்து அந்தக் காட்சிகள் மிகவும் குறைந்தன. இருப்பினும் பல வருடங்களுக்குப் பின்பு 2017 இலங்கையில் பும்ரா கார் பரிசாகப்பெற்றதும் தோனி அனைவரையும் காரில் அழைத்துச்சென்று மகிழ்ந்தார்.
#6 தோனி - யுவ்ராஜ் நட்பு
இந்திய அணியில் சில நண்பர்கள் இருந்தாலும் யுவ்ராஜ் - தோனி நட்பானது
ஓரு படி அதிகமாகவே இருந்தது. தோனி- யுவ்ராஜ் கூட்டணியானது ரன்கள் அடிப்படையில் 7வது சிறந்த கூட்டணியாகும். இவைமட்டுமின்றி சில சர்ச்சைக்குரிய தீபிகா யுவ்ராஜ் தோனி காதல் வதந்திகளும் காணப்பட்டனர்.
இருப்பினும், இருவரும் இந்திய அணி 2011 உலகக்கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தனர். யுவ்ராஜ் தொடர் நாயகன் விருதும் தோனி இறுதிப்போடியில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.