சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலியா Vs இலங்கை ( 2015 ஆம் ஆண்டு )
ஆஸ்திரேலியா – 376/9 ( 50 ஓவர்கள் )
இலங்கை – 312/10 ( 46.2 / 50 ஓவர்கள் )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், ஆஸ்திரேலிய அணியும், இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே முதல் 10 ஓவர்களுக்குள், தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அதன் பின்பு ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் பொறுமையாக நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய ஸ்மித் 72 ரன்கள் விளாசினார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க், 68 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வந்து வெளுத்து வாங்கிய கிளன் மேக்ஸ்வெல், 53 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர்களும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 376 ரன்கள் குவித்தது.
![Kumar Sangakkara](https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/04/b8881-15555920865681-800.jpg 1920w)
377 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய தில்சன், 62 ரன்கள் அடித்து, இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அடுத்து வந்த குமார் சங்கக்காரா, மிகச் சிறப்பாக விளையாடி 104 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய தினேஷ் சண்டிமால் 24 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் இலங்கை அணி 46 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 312 ரன்கள் அடித்தது. எனவே ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
#2) இந்தியா Vs இங்கிலாந்து ( 2011 ஆம் ஆண்டு )
இந்தியா – 338/10 ( 50 ஓவர்கள் )
இங்கிலாந்து – 338/8 ( 50 ஓவர்கள் )
![Sachin Tendulkar](https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/04/ea987-15555923232216-800.jpg 1920w)
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. வீரேந்தர் சேவாக் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அதன் பின்பு வந்து சிறப்பாக விளையாடிய கௌதம் கம்பீர் 51 ரன்களும், யுவராஜ் சிங் 58 ரன்கள் விளாசினார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 338 ரன்கள் குவித்தது.
![Andrew Strauss](https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/04/e3ce7-15555923854612-800.jpg 1920w)
339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கெவின் பீட்டர்சன் மற்றும் ஸ்ட்ராஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய ஸ்ட்ராஸ், 145 பந்துகளில் 158 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய இயான் பெல், 69 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணியும் 338 ரன்கள் அடித்ததால் போட்டி டையில் முடிந்தது. எனவே இரண்டு அணிகளுக்கும் 1 புள்ளி வழங்கப்பட்டது..