கிரிக்கெட் போட்டிகளின் போது கேமராமேனால் படம்பிடிக்கப்பட்டு போட்டியின் போது திரையில் ஒளிபரப்பாகி பல பெண்கள் ஓரே நாளில் மிகவும் பிரபலமாகியுள்ளனர். கடந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் போட்டியை காண வந்த பாகிஸ்தான் ரசிகை மற்றும் ஐபிஎல் தொடரில் கவர்ச்சியான ஆடையுடன் காண வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ரசிகை ஆகியோர் அந்த ஒரே போட்டியில் மிகவும் பிரபலமானார்கள். சிலநாட்களுக்கு ரசிகர்கள் அவர்களை பற்றி மட்டுமே சமூகவலைதளங்களில் பதிவுகளை இட்டு வருவனர். அந்த வகையில் தற்போது 87 வயதான பாட்டி ஒருவர் நேற்றைய போட்டியில் மிகவும் வைரலாகி உள்ளார். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
உலககோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் ரோகித் ஷர்மாவின் சதம், ராகுலின் அரைசதம் மற்றும் ரிஷப் பண்ட்டின் 48 ஆகிய ரன்களின் உதவியோடு 50 ஓவர் முடிவில் 314 ரன்கள் குவித்தது. சிறப்பான துவக்கம் கிடைத்த இந்திய அணிக்கு மோசமான முடிவே அமைந்தது. துவக்க வீரர்களை தவிர அடுத்து வந்த வேறு ஏந்த வீரரும் சிறப்பாக ஆடவில்லை. வங்கதேச அணியின் சார்பாக முஸ்தபிசூர் ரகுமான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
பின்னர் களமிளங்கிய வங்கதேச அணிக்கு இந்த இலக்கை துரத்துவதில் பல தடைகள் ஏற்பட்டன. அணியின் வீரர்கள் யாரும் பெரிய இன்னிங்ஸ்ல் ஆடவில்லை. ஷகிப் அல் ஹசன் மட்டுமே சிறப்பாக விளையாடினார். அவரும் அரைசதத்தை கடந்து வேளியேற அந்த அணி வீரர்கள் அனைவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வேளியேறினர். இறுதியில் 286 ரன்களுக்கே வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. சாய்பூதின் அரைசதத்தை கடந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த போட்டியின் போது கேமராமேனால் திரையில் காட்டப்பட்டார் 87 வயதான சாருலதா பாட்டி. இவர் அப்போது தனது வாயில் விசில் ஒன்றினை வைத்துக்கொண்டு அதனை ஊதியவாறு இந்திய அணியை உற்சாகப்படுத்தினார். இதனல கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் இவரை இணையத்தில் புகழ்ந்து தள்ளி போட்டி முடிவதற்குள் மிகவும் பிரபலமாக்கிவிட்டனர்.
இந்நிலையில் போட்டியானது முடிந்த பின்பு இந்திய அணியின் துணை கேப்டனான ரோகித் ஷர்மா இவரை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கிச் சென்றார். அதன் பின்னர் கேப்டன் விராத்கோலி அந்த பாட்டியை சந்தித்தார். இவரைக் கண்ட பாட்டி விராத் கோலியை கட்டித்தழுவினார். மேலும் அவரிடம் இந்திய அணியை நான் மிகவும் நேசிக்கிறேன். இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் அனைவரும் எனது பிள்ளைகள் எனவும் கூறி நெகிழ்ந்தார்.
இது குறித்து விராத்கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் " போட்டியை காண வந்து எங்களை உற்சாகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதும் வேண்டும் சாருலதா படேல் பாட்டி. 87 வயதிலும் போட்டியை காண வந்த இவரைப் பார்க்கும் போது வயது என்பது வெறும் எண் தான் இவருக்கு ஏன தெரிகிறது" என பதிவிட்டிருந்தார்.
தற்போது ட்விட்டரில் ரசிகர்களால் பலரால் இந்த பாட்டி புகழ்ந்து தள்ளபட்டு வருகிறார்.