ஓவ்வொரு அணிக்கும் ஆல்ரவுண்டர்கள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பார்கள். இருப்பினும் சிறந்த ஆல்ரவுண்டர்கள் மிகவும் குறைவே.
தற்பொழுது நடைபெற்று வரும் போட்டிகளில் அனைத்து கேப்டன்களும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். பல ஆல்ரவுண்டர்கள் தனது அணிகளைப் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் திறைமை வாய்ந்த வீரர்களாக இருப்பதால் அவர்களால் ஜொலிக்கமுடிகிறது.
இவற்றில் 9 முன்னணியில் உள்ள சிறந்த ஆல்ரவுண்டர்ககளை பற்றிப் பார்க்கலாம்.
கார்ல் ஹூப்பர் (மேற்கிந்திய தீவுகள்)
மேற்கிந்திய தீவுகள் அனியின் சிறந்த ஆல்ரவுண்டரான ஹூப்பர் ஒருநாள் போட்டிகளில் 20ஆம் நூற்றாண்டிலும் உலகின் சிறந்த ஆல்ரவுண்டரகளில் ஒருவரவார். 227 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் 5000-க்கும் மேற்பட்ட ரன்கள் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கேட்ச்களை கைப்பற்றி வியக்கத் தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு போன்றவற்றில் அசத்திய இவர் வரலாற்று சிறப்புமிக்க ஆல்ரவுண்டகளில் ஒருவராக இடம்பெற்றார்.
பேட்டிங்கில் மிகவும் நேர்த்தியாக ஆடக்கூடிய இவர், மிடில் அர்டெர் பேட்ஸ்மென் மற்றும் சுழற்ப்பந்துவீச்சாளராகச் செயல் பட்டார், இவரை ஸ்டீவ் வாக் மற்றும் ஷேன் வார்னே போன்ற ஜாம்பவான்கள் அவரது காலங்களில் சிறந்த விளங்கிய ஆல்ரவுண்டர் எனக் குறிப்பிடுகின்றனர்.
1987 ஆம் ஆண்டு முதல் போட்டியில் பங்கேற்ற நாள் முதல் தனது அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வந்த இவர் இரண்டாவது சுற்றுபயணத்தில் இந்தியாவில் சதம் அடித்தார். ஹூப்பர் இயற்கையாக திறமை வாய்ந்தவர் எனக் குறிப்பிட முடியாது அவர் தனது கடின உழைப்பின் மூலம பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் அசத்தி மேற்கிந்திய தீவுகள் அணியின் வரலாற்று சிறப்புமிக்க ஆல்ரவுண்டரானார்.
சனத் ஜெயசூர்யா (இலங்கை)
இலங்கை அணியின் அதிரடி துவக்க வீரர் ஆவர் ஜெயசூர்யா. ஒருநாள் போட்டிகளில் 13430 ரன்களும் 323 விக்கெட்டுகளும் வீழ்த்திய இவர் சரியான ஆல்ரவண்டராக வலம் வந்தார். ஆரம்ப காலங்களில் அதிரடியான பேட்ஸ்மெணாக இறுந்த இவர் பின்பு இவரது பந்துவீச்சும் எதிரணிகளுக்கு தலைவலியாக அமைந்தது.
இவரது பந்துவீச்சின் மூலம பல முறை இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்பட்டுத்தி கொடுத்துள்ளார். பேட்டிங்கிலும் பவர்பிளே ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தார்.
இலங்கை அணியில் தில்ஷான், வாஸ் போன்ற வீரர்கள் இருந்தாலும் ஜெயசூர்யாவின் அனுபவும் மற்றும் செயல்திறனை கொண்டு இலங்கை அணியில் சந்தேகமின்றி சிறந்த ஆல்ரவுண்டராவார் ஜெயசூர்யா.
ஷாகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
வங்காளதேசத்தை சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவரின பங்களிப்பு அவரது அணிக்கு மிகவும் அதிகமாகவே இருந்தன. வங்காளதேச அணியில் திறமை வாய்ந்த வீரர் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாவரும் இல்லை எனிலும், ஷாகிப் உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் ஆவார்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களுக்கு மேலும், 200 விக்கெட்டுகளுக்கு மேலும், 45 கேட்ச்ககளையும் கைப்பற்றியுள்ளார். இவர் பேட்டிங்கில் நிதானமாக ரன்களை சேர்த்து உதவிநாலும் பந்துவீச்சில் அணிக்கு வெற்றி பெற செய்வதில் வல்லவர். நியூசிலாந்து அணிக்கு எதிராக 36 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சிறப்பான பந்துவீச்சாகும்.
வங்காளதேச அணியில் இவரைப் போன்று திறமையான ஆல்ரவுண்டர்கள் குறைவாக இருப்பினும், 2015ஆம் உலகக்கோப்பைக்கு பின்பு வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்து அந்தக் குறையைச் சரி செய்து வருகிறார் ஷாகிப்.
ஷேன் வாட்சன் (ஆஸ்திரலியா)
அனைத்து காலங்களிலும் சிறந்து விளங்கிய ஆல்ரவுண்டர்களில் வாட்சன் சந்தேகமின்றி ஒருவராவார். ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல சாதனைகளைச் செய்துள்ளார்.
வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்ப்பந்துவீச்சுகளை எளிதாகச் சமாளிக்க குடிய இவர் அஸ்திரேலிய அணிக்கு அதிரடியாக ரன் சேர்ப்பதிலும் வல்லவர். வாட்சன் 190 போட்டிகளில் 5757 ரன்களையும் 168 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவர் அஸ்திரேலியா அணியில் இருந்தபொழுது பல ஜாம்பவான்கள் இருந்த காரணத்தால் இவருக்கு பெரிதாக அங்கிகாரம் கிடைக்கவில்லை இருப்பினும் ஒருநாள் போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் .
ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)
எந்தவித சந்தேகமின்றி பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராகத் தேர்வாகிறார் அப்ரிடி. பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்திற்க்கு பெயர் போன அப்ரிடி பந்துவீச்சிலும் துல்லியமாகச் செயல் படக் கூடியவர்.
'லெக் பிரேக்' மற்றும் 'கூக்லி' போன்ற பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மென்களை திணற வைக்கும் இவர், பேட்டிங்கிலும் அதே பாணியியை தொடர்ந்தார், இவரின் ஸ்ரைக் ரேட் 117 ஆனது இவற்றிற்கு சான்று.
398 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 8064 ரன்களும் 395 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 351 சிக்ஸ்ர்களையும் விளாசியுள்ளார்.
லான்ஸ் குளுஸ்னர் (தென் ஆப்பிரிக்கா)
தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து குறிப்பிட்ட ஆல்ரவுண்டர்யை தேர்ந்த்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனெனில் காளிஸ், குளுஸ்னர் மற்றும் போலாக் போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் இவை விவாதத்திற்குரியவை ஆகும். இருப்பினும் குளுஸ்னர் 8 வருடங்களில் தன் திறமையின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க ஆல்ரவுண்டராக உருவெடுத்தார்.
துரதிஷ்டவசமாக இரண்டு உலககோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி பறிதபாமக வெளியேறியபொழுது குளுஸ்னர் இடம்பெற்றிருந்தார். 171 போட்டிகளில் 3576 ரன்களை குவித்த இவர் 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரின் துல்லியமான பந்துவீச்சும் கடைசி கட்ட ஓவர்களில் இவரது பேட்டிங் தென் ஆப்பிரிக்கா அணிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.
கிறிஸ் ஹாரிஸ் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியில் மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடிய ஆல்ரவுண்ராவார் ஹாரிஸ். நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 90'களில் விளையாட ஆரம்பித்தார். 250 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் 4379 ரன்களை குவித்துள்ளார், 203 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தீவிர தோள்பட்டை காயம் காரணமாகத் தனது ஒய்வை அறிவித்தார்.
7ஆவது இடத்தில் களமிறங்கி 2130 ரன்களை குவித்துள்ளார், இவற்றை செய்துள்ள ஒரே வீரர் இவர் தான். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸ்திரலியா அணிக்கு எதிராக 130 ரன்களை குவித்தது எவராலும் மறக்கமுடியாத ஒன்றாகும். இருப்பினும் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. லாதம், லார்சன் மற்றும் நாதன் அஸ்லியுடன் ஹாரிஸின் துல்லியமான பந்துவீச்சு எதிரணிக்கு தலைவலியே.
தற்போதைய அல்ரவுண்டர்களான அஷ்வின், பிலான்டர், ஷாகிப் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் சிறந்த ஆல்ரவுண்டர் எப்படி செயல் பட வேண்டும் என்பதை காட்டினார் ஹாரிஸ்.
கபில் தேவ் (இந்தியா)
இந்திய அணியின் வரலற்றில் சந்தேகமின்றி கபில் தேவ் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். இந்திய அணிக்கு இவரது பங்களிப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை குறிப்பாக 1983 உலகக்கோப்பை.
மிடில் ஆர்டரில் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியைத் தன் வசப்படுத்தும் திறமை கொண்ட இவர் பந்துவீச்சிலும் கடைசி கட்ட ஓவர்களில் செயல்பட கூடியவர் கபில் தேவ். இவரின் பில்டிங் அணிக்குக் கூடுதல் பலம்.
ஒருநாள் போட்டிகளில் 3783 ரன்களை குவித்துள்ளார், ஸ்ரைக்ரேட் 95.07 ஆகும். பந்துவீச்சில் 253 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியவின் சிறந்த ஆல்ரவுண்டர் என நிருபித்துள்ளார்.
ஆண்ட்ரூ பிளின்டாஃப் (இங்கிலாந்து)
இயன் போத்தமமிற்க்கு பின் பிளின்டாஃப் இங்கிலாந்து அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் ஆவார். ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் இவர் பேட்டிங்கில் வேகப்பந்துவீச்சு மற்றும் சூழற்ப்பந்துவீச்சுகளை எளிதாகச் சமாளிக்கக்கூடிய திறமை பெற்ற இவர் வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.
ஒருநாள் போட்டிகளில் 3394 ரன்களை சேர்த்த இவர் 169 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் அல்லாமல் இவரைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இவர் இங்கிலாந்தின் சிறந்த ஆல்ரவுண்டராகச் செயல்பட்டார்.