ஷேன் வாட்சன் (ஆஸ்திரலியா)
அனைத்து காலங்களிலும் சிறந்து விளங்கிய ஆல்ரவுண்டர்களில் வாட்சன் சந்தேகமின்றி ஒருவராவார். ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சிறந்த ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பல சாதனைகளைச் செய்துள்ளார்.
வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்ப்பந்துவீச்சுகளை எளிதாகச் சமாளிக்க குடிய இவர் அஸ்திரேலிய அணிக்கு அதிரடியாக ரன் சேர்ப்பதிலும் வல்லவர். வாட்சன் 190 போட்டிகளில் 5757 ரன்களையும் 168 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவர் அஸ்திரேலியா அணியில் இருந்தபொழுது பல ஜாம்பவான்கள் இருந்த காரணத்தால் இவருக்கு பெரிதாக அங்கிகாரம் கிடைக்கவில்லை இருப்பினும் ஒருநாள் போட்டியில் சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் .
ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்)
எந்தவித சந்தேகமின்றி பாகிஸ்தான் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராகத் தேர்வாகிறார் அப்ரிடி. பேட்டிங்கில் அதிரடி ஆட்டத்திற்க்கு பெயர் போன அப்ரிடி பந்துவீச்சிலும் துல்லியமாகச் செயல் படக் கூடியவர்.
'லெக் பிரேக்' மற்றும் 'கூக்லி' போன்ற பந்துகளின் மூலம் எதிரணி பேட்ஸ்மென்களை திணற வைக்கும் இவர், பேட்டிங்கிலும் அதே பாணியியை தொடர்ந்தார், இவரின் ஸ்ரைக் ரேட் 117 ஆனது இவற்றிற்கு சான்று.
398 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 8064 ரன்களும் 395 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 351 சிக்ஸ்ர்களையும் விளாசியுள்ளார்.
லான்ஸ் குளுஸ்னர் (தென் ஆப்பிரிக்கா)
தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து குறிப்பிட்ட ஆல்ரவுண்டர்யை தேர்ந்த்தெடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும், ஏனெனில் காளிஸ், குளுஸ்னர் மற்றும் போலாக் போன்ற ஜாம்பவான்கள் இருப்பதால் இவை விவாதத்திற்குரியவை ஆகும். இருப்பினும் குளுஸ்னர் 8 வருடங்களில் தன் திறமையின் மூலம் வரலாற்று சிறப்புமிக்க ஆல்ரவுண்டராக உருவெடுத்தார்.
துரதிஷ்டவசமாக இரண்டு உலககோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணி பறிதபாமக வெளியேறியபொழுது குளுஸ்னர் இடம்பெற்றிருந்தார். 171 போட்டிகளில் 3576 ரன்களை குவித்த இவர் 192 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இவரின் துல்லியமான பந்துவீச்சும் கடைசி கட்ட ஓவர்களில் இவரது பேட்டிங் தென் ஆப்பிரிக்கா அணிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.