கிறிஸ் ஹாரிஸ் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியில் மிகவும் குறைவாக மதிப்பிடக்கூடிய ஆல்ரவுண்ராவார் ஹாரிஸ். நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 90'களில் விளையாட ஆரம்பித்தார். 250 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இவர் 4379 ரன்களை குவித்துள்ளார், 203 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2004 ஆம் ஆண்டு தீவிர தோள்பட்டை காயம் காரணமாகத் தனது ஒய்வை அறிவித்தார்.
7ஆவது இடத்தில் களமிறங்கி 2130 ரன்களை குவித்துள்ளார், இவற்றை செய்துள்ள ஒரே வீரர் இவர் தான். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை காலிறுதியில் ஆஸ்திரலியா அணிக்கு எதிராக 130 ரன்களை குவித்தது எவராலும் மறக்கமுடியாத ஒன்றாகும். இருப்பினும் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. லாதம், லார்சன் மற்றும் நாதன் அஸ்லியுடன் ஹாரிஸின் துல்லியமான பந்துவீச்சு எதிரணிக்கு தலைவலியே.
தற்போதைய அல்ரவுண்டர்களான அஷ்வின், பிலான்டர், ஷாகிப் போன்ற ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் சிறந்த ஆல்ரவுண்டர் எப்படி செயல் பட வேண்டும் என்பதை காட்டினார் ஹாரிஸ்.
கபில் தேவ் (இந்தியா)
இந்திய அணியின் வரலற்றில் சந்தேகமின்றி கபில் தேவ் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். இந்திய அணிக்கு இவரது பங்களிப்பானது வார்த்தைகளில் விவரிக்க முடியாதவை குறிப்பாக 1983 உலகக்கோப்பை.
மிடில் ஆர்டரில் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் வெற்றியைத் தன் வசப்படுத்தும் திறமை கொண்ட இவர் பந்துவீச்சிலும் கடைசி கட்ட ஓவர்களில் செயல்பட கூடியவர் கபில் தேவ். இவரின் பில்டிங் அணிக்குக் கூடுதல் பலம்.
ஒருநாள் போட்டிகளில் 3783 ரன்களை குவித்துள்ளார், ஸ்ரைக்ரேட் 95.07 ஆகும். பந்துவீச்சில் 253 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்தியவின் சிறந்த ஆல்ரவுண்டர் என நிருபித்துள்ளார்.
ஆண்ட்ரூ பிளின்டாஃப் (இங்கிலாந்து)
இயன் போத்தமமிற்க்கு பின் பிளின்டாஃப் இங்கிலாந்து அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் ஆவார். ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கும் இவர் பேட்டிங்கில் வேகப்பந்துவீச்சு மற்றும் சூழற்ப்பந்துவீச்சுகளை எளிதாகச் சமாளிக்கக்கூடிய திறமை பெற்ற இவர் வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.
ஒருநாள் போட்டிகளில் 3394 ரன்களை சேர்த்த இவர் 169 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
கிரிக்கெட் அல்லாமல் இவரைப் பற்றித் தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இவர் இங்கிலாந்தின் சிறந்த ஆல்ரவுண்டராகச் செயல்பட்டார்.