மும்பை டி 20 லீக்கில் அர்ஜூன் டெண்டுல்கர்

அர்ஜூன் டெண்டுல்கர்
அர்ஜூன் டெண்டுல்கர்

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சனிக்கிழமை அன்று ஆகாஷ் டைகர்ஸ் மும்பை மேற்கு புறநகர் அணிக்கு ரூ. 5 லட்சத்திற்கு ஏலத்தில் விலை போனார்.

ஏலத்தில் அர்ஜுன், இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இந்தியா-யு-19க்கு தகுதி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு பேட்ஸ்மேன் என பல அணிகள் கவனம் செலுத்திய ஒரு சில வீரர்களில் இவரும் ஒருவராக இருந்தார். அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆல் ரவுண்டர் பிரிவில் அடிப்படை தொகையாக ஒரு லட்சம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆகாஷ் டைகர்ஸில் அர்ஜூன் டெண்டுல்கர்

பல அணிகள் அர்ஜூன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்க விருப்ப பட்டனர். அதனால், ஏலத்தில் அதிகபட்ச தொகையாக 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. அதிக பட்ச தொகையை அடைந்த பின்பும் அணிகளுக்கிடேயே போட்டி நிலவியது, இதனால் ஏலம் நடத்தி வந்த சாரு ஷர்மா, இரண்டு புதிய அணிகள் - ஆகாஷ் டைகர்ஸ் மும்பை மேற்கு புறநகர் மற்றும் ஈகிள் தானே ஸ்ட்ரைக்கர்கள் - ஓடிஎம் (விருப்பமான வீரர்) வாய்ப்பை பயன் படுத்தியதால் இவர்களிடையே டை பிரேக்கர் நடத்த முடிவு செய்தார்.

இரு புதிய அணிகளும் ரூ 5 லட்சம் மதிப்பில் ஓ.டி.எம். பயன்படுத்துவதைத் தேர்ந்தெடுத்தன. பின்னர் இரண்டு அட்டைகள் இரண்டு பையில் வைக்கப்பட்டு, மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் விளம்பர குழுவின் உறுப்பினரான உன்னேஷ் கான்வில்கர் இரண்டில் ஒன்றை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன் படி அவர் ஆகாஷ் டைகர்ஸின் அட்டையை எடுத்தார். இதனால் அவர்களுக்கு ஜூனியர் டெண்டுல்கர் கிடைத்தார்.

சூர்யகுமார் யாதவ், ஆகாஷ் பார்கர் (ட்ரையம்ஃப் நைட்ஸ் மும்பை நார்த் ஈஸ்ட்), ஷிவம் டூபே, சித்தேஷ் லாட் (சிவாஜி பார்க் லயன்ஸ்), ப்ரித்வி ஷா (வடக்கு மும்பை பேந்தர்ஸ்), ஜெய் பிஸ்டா மற்றும் துர்மிள் மேட்கர் (சோபோ சூப்பர்சோனிக்ஸ்), சுபம் ரஞ்சன் , துஷார் தேஷ்பாண்டே (ஆர்க்ஸ் ஆந்தேரி), ஸ்ரேயாஸ் அய்யர், ஏக்நாத் கேர்கர் (நமோ பாந்த்ரா பிளாஸ்டர்ஸ்) ஆகியோர் ஆறு பழைய அணிகளால் அவர் அவரவர் அணியிணரால் தக்கவைக்கப்பட்டனர்.

ஆடித்யா தாரே, சர்பராஸ் கான் (ஈகிள் தானே ஸ்ட்ரைக்கர்ஸ்), தவால் குல்கர்னி மற்றும் ஷம்ஸ் முலானி (ஆகாஷ் டைகர்ஸ் மும்பை மேற்கு புறநகர்) ஆகியோர் இரு புதிய உரிமையாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வான்கடேவில் தொடக்கம்

மும்பை வான்கடே மைதானத்தில் மே 14 ம் தேதி தொடங்கும் மும்பை டி 20 லீக் போட்டியில் முக்கிய பேட்ஸ்மேனான யஷ்வ்தி ஜெய்ஸ்வால் உட்பட 7 வீரர்கள் அண்டர் 19 லீக் ஆடுவதால் இந்த முழு தொடரும் பங்கேற்க்க மாட்டார்கள் என தெரிகிறது.

இதற்கிடையில், சுஜித் நாயக் ரூ 5 லட்சம் ஏலம் வாங்கினர். இவரை ஏலத்தில் எடுக்கவும் பல அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. ஏலத்தில் அர்ஜூன் டெண்டுல்கர் மற்றும் சுஜித் நாயக் இருவரும் அதிக பட்ச விலையான 5 லட்சம் ரூபாய்க்கு விலை போயினர்.

சச்சின் டெண்டுல்கர் தான் மும்பை டி 20 லீக்கின் விளம்பர தூதர் ஆவார்.

Quick Links